ரேணு குமாரி

இந்திய அரசியல்வாதி

ரேணு குமாரி (Renu Kumari) என்பவர் இந்தியா வின் பீகார் மாநிலத்தில் காகரியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய சனதா தளம் கட்சியின் வேட்பாளராவார். இவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் சமூக சேவகராவார். [1].

ரேணு குமாரி சிங் Renu Kumari Singh
எம்.பி
தொகுதிபீகார், காகாரியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு( 1962-08-29)29 ஆகத்து 1962
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஐக்கிய சனதா தளம், பாரதிய சனதா கட்சி
துணைவர்விசயகுமார் சிங்
வாழிடம்(s)167-169, நார்த் அவென்யூ, புது தில்லி -110001
முன்னாள் கல்லூரிபாட்னா பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞர், சமூகப்பணி

இளமைகாலம் மற்றும் கல்வி தொகு

ரேணு பீகார் மாநிலத்திn காகரியா மாவட்டத்திலுள்ள ஆலொலி என்னும் ஊரில் 1962 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 29 ஆம் நாள் பிறந்தார். இவர் பாட்னா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும் பாகல்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான எல்.எல்.பி பட்டம் பெற்றார்.[1]. பீகாரிலுள்ள மாதேபுரா பி.என். மண்டல் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியில் பட்டயம் பெற்றார்.

தொழில் தொகு

ரேணு குமாரி 1999 ஆம் ஆண்டு 13 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரேணு குமாரி 1999 ஆம் ஆண்டு 13 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1999-2000 ஆண்டின் மனுக்கள் தொடர்பான உறுப்பினர் குழுவில் பணியாற்றினார்.

2000-2004 ஆண்டின் உறுப்பினர் ஆலோசனைக் குழு மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் போன்ற துறைகளில் பணி செய்தார்.

மேலும் பல்வேறு அமைப்புகள் வழியாக சமூக மேம்பாடு மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் திட்டங்களில் ஈடுபட்டார்.

ரேணு குமாரி புத்தகங்களைப் படிப்பதிலும், இசை கேட்பதிலும் மகிழ்ச்சி அடைந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Biographical Sketch Member of Parliament 12th Lok Sabha". Archived from the original on 2014-03-16. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணு_குமாரி&oldid=3569962" இலிருந்து மீள்விக்கப்பட்டது