ரேனால்டு ஜான்சன்

ரேனால்டு 'பி. ஜான்சன் (Reynold B. Johnson) (1906-1998) என்னும் அமெரிக்கர் கணினி துறையில் பல புது கண்டுபிடிப்புகளும் புத்தாக்கங்கள் செய்தவர். குறிப்பாக கணினிகளில் தரவுகளையும், கோப்புகளையும் சேமித்து வைக்கும் வன்தட்டு நினைவகம் (hard disk) எனப்படும் நிலைசேமிப்பகத்தை இவர் உருவாகினார். இவரை வன்தட்டு இயக்கியின் தந்தை எனப் போற்றுவர்.

ரேனால்டு ஜான்சன்
பிறப்பு16 சூலை 1906
Dassel
இறப்பு15 செப்டெம்பர் 1998 (அகவை 92)
படித்த இடங்கள்
விருதுகள்அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம்
ரேனால்டு ஜான்சன் உருவாக்கி வளர்ச்சியுற்ற அண்மைக்காலத்து ஐபிஎம் வன்தட்டு நிலைசேமிப்பகம்

ரேனால்டு ஜான்சன் அவர்கள் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா என்னும் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் நெடுங்காலம் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றினார். இவர் 1930களில் பென்சிலால் (கரிக்குச்சி எழுதுகோலால்) கீறப்பட்ட இடத்தை உணரும் வகையான ஒரு புதிய எந்திரத்தைக் கண்டுபிடித்தார். இதன் அடிப்படையிலேயே ஐபிஎம் நிறுவனமானது ஐபிஎம் 805 தேர்வு செய்யும் எந்திரம் (IBM 805 Test Scoring Machine) என்னும் ஓர் எந்திரத்தை 1937 முதல் விற்கத் தொடங்கியது். ஒளிப்பதிவு நாடா செய்வதிலும் இவர் புத்தாக்கங்கள் செய்துள்ளார். இவர் 1971ல் ஐபிஎம் இல் இருந்து ஓய்வு பெற்றார். சுமார் 90 க்கும் அதிகமான புத்தாக்க உரிமங்களை (பேட்டண்ட் Patent) பெற்றுள்ளார். நிலைசேமிப்பகம் உருவாக்கி 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான புதிய தொழிவளர்ச்சி ஏற்படுதிய முன்னோடி என்பதால் இவருக்கு ஐக்கிய அமெரிக்கத் முதல்வர் (பிரெசிடெண்ட்) ரோனால்டு ரேகன் அவர்கள் 1986ல் நாட்டின் தொழிநுட்பப் பதக்கம் என்னும் தலையாய பரிசை அளித்து பெருமை செய்தார்.

உசாத்துணை

தொகு
  • "R.B. Johnson Dies; Disk Drive Inventor." Washington Post. September 20, 1998. Pg. B06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேனால்டு_ஜான்சன்&oldid=2733509" இலிருந்து மீள்விக்கப்பட்டது