ரே சார்ல்ஸ்

ரே சார்ல்ஸ் ராபின்சன், இசைப்பெயர் ரே சார்ல்ஸ், (பிறப்பு செப்டம்பர் 23, 1930, இறப்பு ஜூன் 10, 2004) ஒரு புகழ்பெற்ற அமெரிக்க இசைக்கலைஞரும் பாடகரும் ஆவார். ஆர்&பி என்ற ஆப்பிரிக்க அமெரிக்க இசை வகையில் முன் முதல்வரிசைப் பாடகர்களில் ஒருவராவார். மேற்குலக நாட்டுப்புற இசை (Country music), பாப் இசை ஆகிய இசை வகைகள் இவருடைய இசையாக்கங்களால் தாக்கம் பெற்றன..

ரே சார்ல்ஸ்
ரே சார்ல்ஸின் கடைசி கச்சேரி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ரே சார்ல்ஸ் ராபின்சன்
பிற பெயர்கள்சகோதரர் ரே
பிறப்பு(1930-09-23)செப்டம்பர் 23, 1930
ஆல்பெனி, ஜோர்ஜியா,  ஐக்கிய அமெரிக்கா
பிறப்பிடம்கிரீன்வில், புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புசூன் 10, 2004(2004-06-10) (அகவை 73)
பெவர்லி ஹில்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ஆர்&பி, சோல், புளூஸ், பாப் இசை, நாடு இசை, ஜேஸ், கடவுள் இசை
தொழில்(கள்)பாடகர், இசை எழுத்தாளர், இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்)பாடல், கின்னரப்பெட்டி, சாக்சொஃபோன்
இசைத்துறையில்1947–2004
வெளியீட்டு நிறுவனங்கள்அட்லான்டிக், ஏபிசி, வார்னர் ப்ரோஸ்.
இணைந்த செயற்பாடுகள்த ரேலெட்ஸ், குயின்சி ஜோன்ஸ், பெட்டி கார்டர்
இணையதளம்www.raycharles.com

ஆல்பெனி, ஜோர்ஜியாவில் பிறந்த ரே சார்ல்ஸ் சிறுவராக இருக்கும்பொழுது தன் கண் பார்வையை இழந்தார். 1951ல் முதல் பாடலை எழுதிப் பாடினார். 1953ல் அட்லான்டிக் ரெக்கர்ட்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து அடுத்த 15 ஆண்டுகளாக இவர் இயற்றிப் பாடிய பாடல்களை, அமெரிக்க மக்கள் வெகுவாகக் கேட்டு இன்புற்றதால், இவர் பெரும் புகழுக்கு உரியவரானார்.

பாடகராக இருக்கும் பொழுது இவர் 20 ஆண்டுகளாக ஹெரொயின் என்ற போதைப் பொருளைப் பயன்படுத்தியுள்ளார். இதனால், 1965ல் இவரை காவல்துறை கைது செய்தது.

"ஜோர்ஜியா ஆன் மை மைண்ட்" (Georgia On My Mind), "ஐவ் காட் அ வுமன்" (I've Got A Woman) ஆகியவை இவரின் மிக புகழ்பெற்ற பாடல்களின் சில.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரே_சார்ல்ஸ்&oldid=3816409" இலிருந்து மீள்விக்கப்பட்டது