ரைடன்

பண்டைய கோப்பை

ரைடன் /ˈrˌtɒn, ˈrtən/ (Rhyton பன்மை rhytons) என்பது பானங்களை அருந்த பயன்படுத்தப்படும் கூம்பு வடிவ கொள்கலன் அல்லது பூசை போன்றவற்றின் போது படையல்நீரை நிரப்பி அபிசேகம் போன்றவை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஒரு கொள்கலனாகும். இவை பொதுவாக விலங்குகளின் முகத்தின் வடிவத்தில் உருவாக்கப்பட்டன. இவை பண்டைய ஐரோவாசியாவின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக பாரசீகத்திலிருந்து பால்கன் வரை பெருமளவில் புழக்கத்தில் இருந்துள்ளன. இந்த கோப்பைகள் சிலற்றின் அடிப்பாகத்தில் பானங்களை பருக ஏதுவாக ஒரு துளை உள்ளதாக இருக்கின்றன; பெரும்பாலான ரைடன்களானது பானங்களை நிரப்பிய பிறகு கீழே வைக்க முடியாது. ஏனெற்றால் இவற்றின் அடிபாகமானது தட்டையாக இருக்காது.

ரைடன்
Rhyton
ஈரானின் எகபடனாவில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டு, ஈரான் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள, ஈரானின் அகாமனிசியப் பேரரசு காலத்திய தங்கத்தாலான ஒரு ரைடன் கோப்பை.
செய்பொருள்பீங்கான், உலோகம், கொம்பு, கல்
அளவுசாதாரணப் பயன்பாட்டுக்கு இயல்பான அளவினதாகவும், சடங்கு பயன்பாட்டுக்கு பெரியதாகவும், கூம்பு வடிவினதாகவும், கீழே ஒரு துளையுடனும் இருக்கும்.
எழுத்துபொறிக்கப்பட்டிருக்கலாம் மற்றும் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கலாம்
உருவாக்கம்வரலாற்றுக்கு முந்தைய காலம்
தற்போதைய இடம்ஐரோவாசியா

இதை ஆங்கிலத்தில் குறிக்கும் rhyton என்ற சொல்லானது பண்டைய கிரேக்கச் சொல்லான ῥυτόν (rhy̆tón அல்லது rhŭtón) என்பதில் இருந்து உருவானது. இந்த கூம்பு ரைடன்கள் ஏஜியன் பிராந்தியத்தில் வெண்கலக் காலம் அல்லது கி.மு. இரண்டாம் ஆயிரம் ஆண்டுகளில் இருந்து அறியப்பட்டுள்ளது. ஆனாலும், இது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் யூரோசியாவில் நீண்ட கொம்புகளை பானங்களைக் குடிக்க பயன்படுத்தும் வழக்கம் இருந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்த கலையம்சம் மிக்க ரைடன்கள் உருவானதாக கருதப்படுகிறது.

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Rhyton. The upper section of the luxury vessel used for drinking wines is wrought from silver plate with gilded edge with embossed ivy branch. The lower part goes in the cast Protoma horse. The work of the Greek master, probably for Thracian aristocrat. Perhaps Thrace, the end of the 4th century BC. NG Prague, Kinský Palace, NM-HM10 1407.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைடன்&oldid=2735293" இலிருந்து மீள்விக்கப்பட்டது