ரோகா தாலுகா

ரோகா தாலுகா (Roha takuka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் ஒன்றாகும். [1]இதன் நிர்வாகத் தலைமையிடம் ரோகா நகரத்தில் உள்ளது. ரோகா தாலுகா, ரோகா அஷ்டமி எனும் நகராட்சியும், இரண்டு கணக்கெடுப்பில் உள்ள ஊர்களும், 167 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது[2]

மக்கள் தொகை பரம்பல்தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ரோகா தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 167,110 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 85,638 மற்றும் பெண்கள் 81,472 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 951 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 17763 - 11% ஆகும். சராசரி எழுத்தறிவு 81.52% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 6,822 மற்றும் 21,929 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 88.49%), இசுலாமியர்கள் 6.99%, பௌத்தர்கள் 3.19%, சமணர்கள் 0.75%, கிறித்துவர்கள் 0.25% மற்றும் பிறர் 0.33% ஆக உள்ளனர்.[3]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகா_தாலுகா&oldid=3357707" இருந்து மீள்விக்கப்பட்டது