ரோசாசைட்டு
ரோசாசைட்டு (Rosasite) (Cu,Zn)2(CO3)(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கார்பனேட்டு வகை கனிமமாகும். துத்தநாகம் மற்றும் தாமிர தாதுவாகப் பயன்படுத்தக்கூடிய சிறிய அளவு திறன் கொண்டது. வேதியியல் ரீதியாக சொல்வதென்றால் இதை ஒரு செப்பு துத்தநாக கார்பனேட்டு ஐதராக்சைடு எனலாம். இக்கனிமத்தில் உள்ள செப்பு மற்றும் துத்தநாக விகிதம் 3:2 ஆகும். செப்பு-துத்தநாக படிவுகளில் இரண்டாம் நிலை ஆக்சிசனேற்ற மண்டலத்தில் ரோசாசைட்டு தோன்றுகிறது. முதலில் 1908 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டின் சார்டினியாவில் உள்ள ரோசாசு சுரங்கத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயரே கனிமத்திற்கும் சூட்டப்பட்டது. இழைவடிவ நீல-பச்சை ரோசாசைட்டு படிகங்கள் பொதுவாக உருண்டையான திரட்டுகளில் காணப்படுகின்றன, பெரும்பாலும் இரும்புத் தாதுவான சிவப்பு லிமோனைட்டு மற்றும் பிற வண்ணமயமான தாதுக்களுடன் தொடர்பு கொண்டதாகவும் ரோசாசைட்டு உள்ளது. ஆரிகால்சைட்டு கனிமத்தைப் போலவே இருக்கும் என்றாலும் ரோசாசைட்டை அதன் உயர்ந்த கடினத்தன்மையால் வேறுபடுத்தி அறியலாம்.
ரோசாசைட்டு Rosasite | |
---|---|
நீல மிருதுவான திறள் | |
பொதுவானாவை | |
வகை | கார்பனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | (Cu,Zn)2(CO3)(OH)2 |
இனங்காணல் | |
நிறம் | நீலம், நீலப்பச்சை, பச்சை |
படிக இயல்பு | கதிரியக்க இழை கொத்துகள் போன்ற ஊசி வடிவப் படிகங்கள் |
படிக அமைப்பு | ஒற்றைச்சாய்வு |
இரட்டைப் படிகமுறல் | On {100} |
பிளப்பு | சரிபிளவு {100} மற்றும் {010} |
முறிவு | பிளவு, இழைவடிவம் |
விகுவுத் தன்மை | உடையும் |
மோவின் அளவுகோல் வலிமை | 4 |
மிளிர்வு | பட்டுப்போன்றது, கண்ணாடி பளபளப்பு முதல் மங்கல் வரை |
கீற்றுவண்ணம் | இள நீலம் அல்லது பச்சை |
ஒப்படர்த்தி | 4-4.2 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.672 - 1.688 nβ = 1.796 - 1.830 nγ = 1.811 - 1.831 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.139 - 0.143 |
பலதிசை வண்ணப்படிகமை | வலிமையானது: X = வெளிர் மாணிக்கப் பச்சை அல்லது நிறமற்று; Y = அடர் மாணிக்கப் பச்சை அல்லது வெளிர் நீலம்; Z = அடர் மாணிக்கப் பச்சை அல்லது வெளிர் நீலம் |
2V கோணம் | அளக்கப்பட்டது: 33° |
கரைதிறன் | நுரைக்கும், குளிர்ந்த நீர்த்த ஐதரோகுளோரிக் காடி |
மேற்கோள்கள் | [1][2][3] |
Major varieties | |
Nickeloan rosasite | Dark green |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் ரோசாசைட்டு கனிமத்தை Rss[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Handbook of Mineralogy
- ↑ Mindat
- ↑ Webmineral
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.