ரோசானோ எர்கோலினி

இத்தாலிய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

ரோசானோ எர்கோலினி (Rossano Ercolini) இத்தாலி நாட்டைச் சேர்ந்த மத்திய இத்தாலியின் முதல்நிலை நிர்வாக அலகான டசுக்கனி பகுதியைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலராவார். கழிவுகளை எரித்து சாம்பலாக்குவதால் ஏற்படும் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் சுழியக் கழிவுக் கொள்கைகளுக்காக வாதிட்டதற்காகவும் 2013 ஆம் ஆண்டு எர்கோலினிக்கு கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு வழங்கப்பட்டது. [1]

ரோசானோ எர்கோலினி
Rossano Ercolini
தேசியம்இத்தாலியர்
பணிதொடக்கப்பள்ளி ஆசிரியர்
அறியப்படுவதுசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2013)

1994 ஆம் ஆண்டு டசுகனியில் உள்ள ஒரு சிறிய பகுதியில்  எரியூட்டலுக்கான கட்டுமானத் திட்டங்கள் முன்மொழியப்பட்டன. ஆயினும் எரியூட்டுதலின் தாக்கம் குறித்து குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. ஒவ்வோர்  ஆண்டும்  குப்பைக் கழிவுகளை எரியூட்டுவதால் பைங்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் விடுவிக்கப்பட்டு  அருகிலுள்ள குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் நச்சுகள் உருவாகின்றன என்ற தகவல் குடியிருப்பாளர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. இந்த அபாயம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் சொல்லும் முன்னெடுப்புகளை மேற்கொண்டு இவர் செயல்பட்டார்.  

மேற்கோள்கள்

தொகு
  1. "Prize Recipient: Rossano Ercolini, 2013 Europe". Goldman Environmental Prize. பார்க்கப்பட்ட நாள் 3 June 2014.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசானோ_எர்கோலினி&oldid=3190193" இலிருந்து மீள்விக்கப்பட்டது