ரோசா குட்டி

இந்திய தடகள வீராங்கனை

ரோசா குட்டி (Rosa Kutty) ஒரு முன்னாள் இந்தியடகள விளையாட்டு வீராங்கனையாவார். ரோசா குட்டி கேரளாவில் உள்ள மூவாட்டுப்புழாவின் அயவனாவைச் சேர்ந்தவர். இப்போது கர்நாடகாவில் பெங்களூரில் வசிக்கிறார்.

1964 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1996 மற்றும் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக 4x400 தொடர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார்.[1] 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு பிரிவில் விளையாட்டு அதிகாரியாக ரோசா குட்டி பணிபுரிகிறார். இவரின் சாதனைகளுக்காக இந்திய அரசாங்கம் இவருக்கு அருச்சுனா விருது வழங்கி சிறப்பித்தது.

பதக்கங்கள்

தொகு

•1989 ஆசிய சந்திப்பு விளையாட்டுப் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் •பீகிங் ஆசியப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம்
•1998 பாங்காக்கு ஆசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Rosa Kutty Kunnath Chacko Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 9 September 2017. பரணிடப்பட்டது 2020-04-18 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசா_குட்டி&oldid=3285473" இலிருந்து மீள்விக்கப்பட்டது