ரோமன் ரோலண்ட் நூலகம், புதுச்சேரி

ரோமன் ரோலண்ட் நூலகம் (Romain Rolland library) பிரெஞ்சு இந்திய புதுச்சேரியின் கவர்னராக இருந்த எங்கனே டெச்பைச்ச்ய்ன்ச் தே ரிச்மொன்டால் (Eugene Desbassyns de Richemont) புதுச்சேரியில் 1827ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இங்குள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 1839 ஆம் அண்டு 5,013 ஆக இருந்தது. 1850ஆம் அண்டு இந்த எண்ணிக்கை 6,500 ஆக உயர்ந்தது. கணினி புத்தகங்களுக்காக ஒரு தனி பிரிவு இயங்குகின்றது.

ரோமன் ரோலண்ட் நூலகம்
நாடுஇந்தியா
வகைபொதுநூலகம்
தொடக்கம்16 மே 1827[1]
அமைவிடம்புதுச்சேரி, இந்தியா
அமைவிடம்11°56′04″N 79°50′09″E / 11.934366942487252°N 79.83576590089076°E / 11.934366942487252; 79.83576590089076
Collection
Items collectedபுத்தகம், ஆய்விதழ், இதழ், பிரெயில் எழுத்து முறை புத்தகம், கையெழுத்துப்படி பிரஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில்
அளவு400,000[2]
Access and use
சுழற்சி200,000
Map
Map
Roman Rolland Library,Puducherry (union territory),India


இந்த நூலகம் துவங்கப்பட்டபோது போது பொது நூலகம் என்று கூறபட்டாலும் அதில் ஐரோப்பியர்கள் மட்டுமே அனுமதிக்கபட்டனர். மற்றவர்கள் சிறப்பு அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்க பட்டனர். பிரெஞ்சு மொழி கற்கவும் அதைக் கற்ற பூர்விக குடிமக்கள்வும் தங்கள் பிரெஞ்சு மொழி ஆற்றலை மேம்படுத்த 1837 ஆம் ஆண்டு இந்தத் தடை நீக்கபட்டது.

  • மொத்தம் உள்ள புத்தகங்களின்ன் எண்ணிக்கை - 3,80,794
  • வார மற்றும் மாத இதழ்கள் எண்ணிக்கை - 162
  • தினசரி செய்தித்தாட்கள் எண்ணிக்கை - 26
  • தினமும் வரும் பார்வையாளர் எண்ணிக்கை - 2000
  • தினமும் உறுப்பினர்களுக்குக் கடனாக வழங்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை - 250
  • பெரியவர் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை -45,000
  • உறுப்பினர்களுக்கு ஆண்டு ஒன்று கடனாக கொடுக்க படும் புத்தகத்தின் எண்ணிக்கை -இரண்டு லட்சம் ஆகும்

நூலக அலுவல் நேரம்

தொகு
  • காலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணிவரை .
  • செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை எந்தவித இடர்பாடும் இன்றி இயங்குகிறது.
  • திங்கள் கிழமை அன்று மட்டும் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாரஇதழ்கள் வாசிப்புக்கு மட்டும் இயங்கும்.

குழந்தைகள் பிரிவு

தொகு

குழந்தைகள் பிரிவு தொடங்கப்பட்டதன் காரணம் குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை கொண்டுவருவதே ஆகும்.இளைய தலைமுறையினர் வாசிப்பு பழக்கத்தை தங்கள் அன்றாட வாழ்வில் கடைபிடித்தால் அவர்களுக்கும் நாட்டுக்கும் அது நன்மை பயக்கும் .

இந்த பிரிவில் 4 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் உறுபினர்களாக பல பள்ளிகளில் இருக்கும் 7000 மாணவர்கள் இதில் உறுபினர்களாக பதிவுபெற்று  பயன் பெறுகின்றனர்  

குழந்தைகள் பிரிவு அலுவல் நேரம்

தொகு
  • இந்த பிரிவு மாலை 4.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இயங்குகிறது.
  • சனி ,ஞாயிறு மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில்.
  • காலை  9.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இயங்குகிறது.

அரிய நூல் பிரிவு

தொகு

இந்த பிரிவில் சுமார் 15,000 அரிய நூல்கள் உள்ளன .நாடு முழுவதும் மட்டும் இன்றி உலகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள அறிஞர்கள பலர் இன்றும் இங்கு வந்து பயன் பெற்று செல்கின்றனர் .இந்த நூல்கள் மிக அரியண மட்டும் இன்றி மிக பழமை வாய்ந்தவை ஆகும் ஆகையால் இதன் கையாளுவதில் மிக கவனம் தேவை .அவற்றின் தரத்தை மேம்படுத்த மற்றும் பாதுகாக்க வேண்டி இப்போது  அவை அனைத்தும் நுண்ணிழைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றன .

இந்த நூலகம் இப்போது புதுவை அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ்  இயங்குகிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. Pondy Tourism-Romain Rolland Library[தொடர்பிழந்த இணைப்பு]. www.pondytourism.in/iconics-innerpage.php?id=42&district=Puducherry&category=195 retrieved on 2016-06-14.
  2. "Romain Rolland Library - About us". பார்க்கப்பட்ட நாள் 2021-02-08.