ரோல்ஸ் ராய்ஸ் அருங்காட்சியகம்
ரோல்ஸ் ராய்ஸ் அருங்காட்சியகம் (Rolls-Royce Museum) என்பது தனியார் ஒருவருக்குச் சொந்தமான தானியங்கி அருங்காட்சியகம் ஆகும். இது 1982ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் உள்ள டோர்ன்ப்ரன், வோரேர்ல்பெர்கில் நிறுவப்பட்டது. 1999ஆம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய ரோல்ஸ் ராய்ஸ் வாகனங்களைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.[1]
நிறுவப்பட்டது | 1999 |
---|---|
அமைவிடம் |
|
ஆள்கூற்று | 47°23′26″N 09°46′37″E / 47.39056°N 9.77694°E |
வகை | தானியங்கி அருங்காட்சியம் |
இயக்குனர் | ஜோகன்னஸ் வோனியர் |
வலைத்தளம் | Rolls-Royce Museum |
எப் எம் ஹாமேர்ல் என்பருக்குச் சொந்தமான ஜவுளி தொழிற்சாலையில் இந்த அருங்காட்சியகம் முன்னர் செயற்பட்டது. 2017ஆம் ஆண்டில், அருங்காட்சியகத்தின் நிறுவனர் ஃபிரான்ஸ் வோனியர் இறந்தார். உள்ளூர் நகரமும் மாநிலமும் அருங்காட்சியகத்தின் வாடகைக் கொடுப்பனவுகளை வழங்குவதை நிறுத்த முடிவு செய்தன. எனவே நிறுவனரின் வாரிசுகளான பெர்ன்ஹார்ட் மற்றும் ஜோகன்னஸ் வோனியர் அருங்காட்சியகத்தை அருகிலுள்ள ஒரு சிறிய கட்டிடத்திற்கு மாற்றினர்.
இந்த கட்டிடம் மிகச்சிறியதாக இருப்பதால், அருங்காட்சியக நிர்வாகிகள் தற்பொழுது சிறப்புக் கண்காட்சிகளில் கவனம் செலுத்துகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய கருப்பொருளில் இக்கண்காட்சியினை நடத்துகின்றனர். அருங்காட்சியகத்தின் நிரந்தர சேகரிப்பு 1,000க்கும் மேற்பட்ட பொருட்களால் ஆனது.[2] இதில் 70 வகையான வாகனங்களும் அடங்கும்.
நிரந்தர கண்காட்சியின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:[3]
- 1927 பாண்டம் I, லாரன்ஸ் ஆப் அரேபியாவில் பீட்டர் பீட்டர் ஓ டூல் இயக்கப்பட்டது
- 1927 பாண்டம் I, பிரான்சிஸ்கோ பிராங்கோவுக்கு சொந்தமானது
- 1932 பாண்டம் II, ரீட்டா ஹேவொர்த்தால் இயக்கப்பட்டது
- 1936 பாண்டம் III, எலிசபெத் மகாராணியாருக்கு சொந்தமானது
மேற்கோள்கள்
தொகு- ↑ "FIA Heritage Museums: Historic Vehicles around the World". பார்க்கப்பட்ட நாள் July 19, 2016.
- ↑ "Vonier Rolls Royce Museum". FIA Heritage Museums. Fédération Internationale de l'Automobile. பார்க்கப்பட்ட நாள் 23 October 2013.
- ↑ Wade, Paul (2016-02-05). "Rolls-Royce Museum, Austria: Tales of the Unexpected" (in en-GB). The Telegraph. பன்னாட்டுத் தர தொடர் எண்:0307-1235. https://www.telegraph.co.uk/travel/destinations/europe/austria/articles/Rolls-Royce-Museum-Austria-Tales-of-the-Unexpected/.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Rolls-Royce Museum தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- ரோல்ஸ் ராய்ஸ் அருங்காட்சியகம் - அதிகாரப்பூர்வ தளம் (in இடாய்ச்சு மொழி and ஆங்கில மொழி)