திராயன் போர்

(றோய்யன் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


திராயன் போர் அல்லது திரோயன் போர் (Trojan War) ஓமர் எழுதிய இரு பெரும் கிரேக்க காப்பியங்களான இலியட்டு மற்றும் ஓடிசிக்கு பின்புலம் ஆகின்றது. இலியட்டு பத்து ஆண்டுகள் நிகழந்த திராயன் போரின் இறுதி ஆண்டின் ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிசி, திராயன் போரில் பங்குகொண்ட ஒரு கிரேக்க தீவின் அரசனான ஓடீசியசு நாடு திரும்புகையில், வழிதவறி மீண்ட ஒரு பயணக் கதையை விபரிக்கின்றது.

Homer and His Guide, by William-Adolphe Bouguereau (1825–1905)

கிரேக்க காப்பியங்கள், கடவுள்கள், மனிதர்கள், பல வித உயிரினங்கள், இடங்கள், உலகங்கள், சக்திகள், இயற்கை வினோதங்கள், நிகழ்வுகள் எனப் பல அம்சங்கள் அடங்கிய பரந்த கதைப் புலங்களைக் கொண்டவை. எனினும் திராயன் போரை கெலன் (ஃகெலன்) என்ற ஒரு பெண்ணுக்கான ஒரு போராக, ஒரு மனித தளத்தில் நோக்கலாம்.

கெலனின் சுயம்வரம்

தொகு
 
Helen of Troy by Evelyn De Morgan

கிரேக்க நாட்டின் ஒரு நகரம் எசுப்பார்த்தா ஆகும். எசுப்பார்தாவை இரின்டர்யசு என்ற அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு கெலன் என்ற ஒரு அழகிய மகள் இருந்தாள். கெலனை திருமணம் செய்ய கிரேக்க நாட்டின் பல இளவரசர்கள் விரும்பினர். ஆயினும் இரின்டர்யசு அவளை எந்த ஒர் இளவரசனுக்கும் மணம் முடிக்கப் பயந்தான், ஏனெனில் பிற இளவரசர்கள் கோபம் கொண்டு அவனது நகரை அழித்துவிடுவார்கள் என்பதால். இவர்களில் ஓடீசியசு என்னும் இளவரசன் இந்தச் சிக்கலைத் தீர்க்க ஒரு யோசனையை இரின்டர்யசுக்கு சொன்னான். கெலனை மணக்க விரும்புகின்றவர்களிடம் இருந்து ஒரு சத்தியம் பெற்றுக் கொள்ளும்படி ஆலோசனை கூறினான். யார் யார் எல்லாம் கெலனை மணக்க விரும்புகின்றார்களோ அவர்கள் எல்லோரும் ஒரு சுயம்வரத்தில் அவள் தேர்ந்தெடுக்கப் போகும் இளவரசனுடனான திருமணத்தை மதித்து நடக்கவேண்டும் என்பதுவே அது. சில பிணக்குகளுக்கு பின் அதற்கு அனைத்து இளவரசர்களும் இணங்கினர். கெலன், மெனெலசு என்ற இளவரசனை தெரிந்து திருமணம் செய்தாள். மெனெலசு எசுப்பார்த்தாவின் அரசுரிமையை பெற்றான். ஒடீசியசின் உதவிக்குக் கைமாறாகத் தனது உறவினளான பெனலிப்பி என்ற பெண்ணை மணம் செய்ய இரின்டயர்சு ஒடீசியசுக்கு உதவினான். ஒடீசியசு தன் தீவு நாடான இத்தாக்காவிற்கு திரும்பி பெனலிப்பியுடன் வாழத் தொடங்கினான்.

பாரிசின் தீர்ப்பு

தொகு
 
The Judgement of Paris, பீட்டர் பவுல் ரூபென்ஸ், ca 1636 (National Gallery, London)

இச்சமயம் பாரிசு என்ற திராய் நாட்டு இளவரசன் எசுப்பார்த்தாவிற்கு வந்தான். அஃபறோடைரி என்ற காதல் தேவதைக்குச் சார்பாக ஒரு தீர்ப்புச் சொன்னதனால் பாரிசு, கெலனை ஒரு வரமாகப் பெற்றிருந்தான். இதனால் பாரிசு கெலனைக் கவர்ந்து திராய்க்குக் கொண்டு சென்றான்.

"ஆயிரம் கப்பல்களை ஏவிய ஒர் அழகு"

தொகு

கெலனின் தெரிவையும் திருமணத்தையும் பாதுகாக்கச் சத்தியம் செய்திருந்த கிரேக்க இளவரசர்கள் அனைவரும் அவளை மீட்பதற்காய் திராய் சென்றனர். இதனையே "ஆயிரம் கப்பல்களை ஏவிய ஒர் அழகு" என்று கிறித்தோபர் மார்லொவ் பின்னர் விபரித்தான். கிரேக்கத்திற்கும் திராய்க்கும் அதன் நேச நாடுகளுக்கும் இடம்பெற்ற போரே திராயன் போராகும். இப்போரில் கிரேக்கப் படைகள் வென்று, திராய் அழிந்து போனது.

 
Map of Homeric Greece
 
Map of the Troas

வரலாற்றுக் கூற்றுக்கள்

தொகு

இப்போர் அல்லது இப்போரை ஒத்த வரலாற்று போர் உண்மையில் இடம்பெற்றதா, அல்லது றோயன் போர் ஒரு கதை அம்சமா என்பது குறித்து எந்த வித தெளிவான முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. ஆனால், இப்போரின் விபரணமும், இப்போரைப் பின்புலமாக வைத்து இயற்றப்பட்ட பல கிரேக்க காப்பியங்கள், தொன்மவியல் கதைகளும் இப்போரை மேற்கத்தைய இலக்கியத்திலும், பண்பாட்டிலும், வரலாற்றிலும் ஒரு முக்கிய நிகழ்வாக ஆக்கியிருக்கின்றன.

வரலாற்றுக் கதை

தொகு

போரின் தொடக்கம்

தொகு

சியுசின் திட்டம்

தொகு

சியுசு என்பவர் கடவுள்களுக்கு எல்லாம் கடவுளாக விளங்கியவர். இவர் இவரது மனைவி எராவிற்கு உண்மையானவராக இருக்கவில்லை. பிற பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்து, பல பிள்ளைகளைப் பெற்றார். இதனால் பூமியில் மக்கள் தொகை அதிகரித்தது. ஆகவே இந்த போரின் மூலம் பலரை அழிக்க திட்டமிட்டார்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராயன்_போர்&oldid=3452703" இலிருந்து மீள்விக்கப்பட்டது