லகிரு கமகே
பனகமுவா லகிரு சம்பத் கமகே (Panagamuwa Lahiru Sampath Gamage (பிறப்பு:ஏப்ரல் 5, 1988) பொதுவாக லகிரு கமகே என அறியப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப் பந்துவீச்சாளர் ஆவார். இலஙகைத் துடுப்பாட்ட அ அணி, பதுரெலியா துடுப்பாட்ட அணி,சிலா மரியன்ஸ், துடுப்பாட்ட சங்கம், நான்தர்ஸ்கிரிப்ட்ஸ் துடுப்பாட்ட சங்கம், காவல் துடுப்பாட்ட சங்கம், சிங்கள துடுப்பாட்ட சங்கம், தமிழ் யூனியன் மற்றும் அத்லெடிக் கிளப் சங்கம் ஆகிய அணிகளுக்காக உள்லூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
உள்ளூர்ப் போட்டிகள்
தொகு2017-18 ஆம் ஆண்டிற்கான சூப்பர் ஃபோர் புரொவென்சியல் துடுப்பாட்டத் தொடரில் இவர் தம்புலா அணி சார்பாக விளையாடினார்.[1][2] இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி 10 இலக்குகளைக் கைப்பற்றினார்[3].இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதல் இடம்பெற்றார். 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தத் தொடரிலும் இதே அணிக்காக விளையாடினார்.[4]
2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் லீக் தொடரில் இவர் கண்டி அணியில் இடம் பெற்றுள்ளார்.[5]
சர்வதேச போட்டிகள்
தொகுதேர்வு போட்டிகள்
தொகு2017 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் இடம் பெற்றார். ஆனால் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2017 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அக்டோபர் 6 இல் அபுதாபியில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரன்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 11 பந்துகளைச் சந்தித்த இவர் 1 ஓட்டங்களை எடுத்து யாசிர் ஷா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 15 ஓவர்கள் வீசி 38 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 2 ஓவர்களை மெய்டனாக வீசினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 1 பந்துகளைச் சந்தித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஓர் ஓட்டங்களை எடுத்தார். 16 ஓவர்களை வீசி 29 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஓர் இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் ஐந்து ஓவர்களை மெய்டனாக வீசினார்.[6]
பின் 2018 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. சூன் 6 இல் எசுப்பானியாவில் நடைபெற்ற முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 26 ஓவர்கள் வீசி 67 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. அதில் 6 ஓவர்களை மெய்டனாக வீசினார்.பின் மட்டையாட்டத்தில் 10 பந்துகளைச் சந்தித்தார். ஆனால் ஓட்டங்களை எடுக்கவில்லை. பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 15 ஓவர்கள் வீசி 43 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். 3 ஓவர்களை மெய்டனாக வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.பின் 49 பந்துகளைச் சந்தித்து 3 ஓட்டங்களை எடுத்து பிசூ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.மேற்கிந்தியத் தீவுகள் அணி 226 ஓட்டங்களில் வெறி பெற்றது.
சான்றுகள்
தொகு
- ↑ "All you need to know about the SL Super Provincial Tournament". Daily Sports. 26 March 2018 இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180327213128/https://dailysports.lk/all-you-need-to-know-about-the-sl-super-provincial-tournament/. பார்த்த நாள்: 27 March 2018.
- ↑ "Cricket: Mixed opinions on Provincial tournament". Sunday Times (Sri Lanka). 26 March 2018. http://www.sundaytimes.lk/article/1041112/cricket-mixed-opinions-on-provincial-tournament. பார்த்த நாள்: 27 March 2018.
- ↑ "Sri Lanka Super Four Provincial Tournament, 2017/18, Dambulla: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 April 2018.
- ↑ "SLC Super Provincial 50 over tournament squads and fixtures". The Papare. http://www.thepapare.com/slc-super-provincial-50-tournament-squads-fixtures/. பார்த்த நாள்: 27 April 2018.
- ↑ "SLC T20 League 2018 squads finalized". The Papare. http://www.thepapare.com/slc-t20-league-2018-squads-finalized/. பார்த்த நாள்: 16 August 2018.
- ↑ "2nd Test (D/N), Sri Lanka tour of United Arab Emirates and Pakistan at Dubai, Oct 6-10 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.