லட்சுமிபுரம் (தேனி மாவட்டம்)
லட்சுமிபுரம் (Lakshmipuram) என்பது இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் தென்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு கிராமம் ஆகும்[1] மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தேனி நகரிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், பெரியகுளத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை எண் 183 இல் இக்கிராம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் மக்கள் தொகை 10000 மக்களுக்கும் அதிகமாகும்.
லட்சுமிபுரம்
Lakshmipuram எல்.புதுப்பட்டி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°4′38.55″N 77°31′11.41″E / 10.0773750°N 77.5198361°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தேனி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,000+ |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
வடக்கில் கொடைக்கானல் தாலுக்கா, தெற்கே ஆண்டிபட்டி தாலுக்கா, தெற்கே தேனி தாலுக்கா, கிழக்கே வத்லகுண்டு தாலுக்கா போன்றவை லட்சுமிபுரத்தைச் சூழ்ந்துள்ளன. மாநிலத்தின் தலைநகரான சென்னையிலிருந்து 500 கி.மீ. தொலைவில் இக்கிராமப் பஞ்சாயத்து அமைந்துள்ளது.