லட்சுமி என்னும் பயணி (நூல்)

லட்சுமி என்னும் பயணி என்பது தமிழில் எழுதப்பட்ட ஒரு தன்வரலாற்று நூலாகும். இதை எழுதியவர் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ. மணியரசனின் மனைவியான லட்சுமி ஆவார்.

லட்சுமி என்னும் பயணி (நூல்)
ஆசிரியர்(கள்):லட்சுமி அம்மா
வகை:தன்வரலாறு
துறை:வரலாறு
இடம்:சென்னை 91
மொழி:தமிழ்
பக்கங்கள்:152
பதிப்பகர்:மைத்ரி பதிப்பகம்
பதிப்பு:முதற் பதிப்பு 2017

வறுமையான குடும்பத்தில் பிறந்த லட்சுமி பள்ளிக்குச் செல்ல ஆசைப்பட்டு தானே சென்று பள்ளியில் சேர்ந்து பள்ளி இறுதிவரைப் படித்தார். பின்னர் ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து அங்கு பொது உடமை இயக்கத்தினருடன் ஏற்பட்ட நட்பில் இயக்கத்தைச் சேர்ந்தவரையே மணந்தார். அரசியல் மற்றும் பொதுநல அக்கறையோடு, இயக்கத்தவர்களின் குடும்பங்களுக்குப் பொறுப்பேற்பது, அதற்காக உழைப்பது, பொருள் ஈட்டிப் பசியாற்றுவது, வாய்ப்பு கிடைக்கும்போது அரசியல் வாழ்க்கையில் பங்கேற்பது என்று தன் முழு வாழக்கைப் போராட்டங்களைப் பற்றி இதில் விவரித்துள்ளார்.[1]

விருது

தொகு

இந்த நூலுக்கு சுயசரிதை வகைமையில் ஸ்பேரோ (Sound and Picture Archives for Research On Women) விருது 2017 ஆம் ஆண்டு கிடைத்தது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. பிரபஞ்சன் (10 சனவரி 2018). "தோழமை என்று ஒரு சொல்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 10 சனவரி 2018.
  2. "லட்சுமி என்னும் நித்தியப் போராளிக்கு விருது". கட்டுரை. தி இந்து தமிழ். 13 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2018.