லட்சுமி சுருதி செட்டிப்பள்ளி

லட்சுமி சுருதி செட்டிப்பள்ளி (பிறப்பு 12 ஜூன் 1996) இந்தியாவின் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட சுவர்ப்பந்து வீராங்கனையும் தொழில் முனைவோருமாவார், தேசிய மற்றும் சர்வதேச அளவில் சுவர்ப்பந்து விளையாட்டில் பல்வேறு பட்டங்களை வென்றுள்ள இவர் தனது பதினேழு வயதிலிருந்தே தொழில்முறை சுவர்ப்பந்து விளையாடியுள்ளார். ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி உலக தரவரிசையில் 145 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

லட்சுமி சுருதி, 12 ஜூன் 1996 அன்று சென்னையில் வெற்றிகரமான மற்றும் தலைமுறைகளாக சுரங்கம், உலகளாவிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் வைஷ்ணவி செட்டிப்பள்ளி ஆகியோருக்கு மகளாகப் பிறந்துள்ளார். இவரது பன்னிரெண்டாம் வயதிலிருந்தே சுவர்பந்து விளையாடத் தொடங்கியுள்ளார். மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் தனது ஸ்குவாஷ் வாழ்க்கையைத் தொடங்கியுள்ள இவர் பின்னர் தனது பயிற்சியை தேசிய பயிற்சியாளர் சைரஸ் போஞ்சாவின் கீழ் சென்னையில் உள்ள ICL-TNSRA ஸ்குவாஷ் அகாடமியில் பயிற்சி எடுக்க ஆரம்பித்துள்ளார். சுருதி, சென்னையில் உள்ள ஆண்டாள் வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.

விருதுகள் தொகு

  • தேசிய மற்றும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டதற்காக "ஆண்டின் சிறந்த தடகள வீராங்கனை" என்ற விருதைப் பெற்றுள்ளார்.
  • டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய பஞ்ச் லாயிட்ஸ் போட்டியில் அணி பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
  • 2012 ஆம் ஆண்டில் ஐரோப்பிய சர்க்யூட்டில் 30 ரன்களை எட்டிய சுருதி, ஸ்லோவாக் ஜூனியர் ஓபனில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீரராவார்.
  • பின்லாந்து ஜூனியர் ஓபனில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
  • சென்னை ஜூனியர் ஓபனில் தங்கப் பதக்கம் மற்றும்
  • ஆந்திர ஓபனில் வெள்ளியை வென்றுள்ளார்.
  • ஆஸ்திரேலிய ஜூனியர் ஓபன்,
  • ஸ்பானிஷ் ஜூனியர் ஓபன் மற்றும்
  • இந்திய ஜூனியர் ஓபன் ஆகியவற்றில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளார்.

தனது பதினேழாவது வயதில் தொழில்முறை சுவர்பந்து சங்கத்தில் நுழைந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே அவரது தொழில் வாழ்க்கையின் அதிகபட்சமாக எண்ணிக்கையான 145 ஐ பிடித்துள்ளார்.

பின்னர் அவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் வாஷிங்டன் டிசியில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார், நிறுவன அறிவியலில் பட்டப்படிப்பைப் படிக்கும் போதும் அந்தபல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக சார்பில் விளையாடும் வீரராக இருந்துள்ளார்.[1] [2]

மேற்கோள்கள் தொகு

  1. "I Want To Be The Best". Dc-epaper.com. Archived from the original on 20 October 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-10-19.
  2. "Different Strokes". Dc-epaper.com. பார்க்கப்பட்ட நாள் 2013-10-19.