லட்சுமி நரசிம்மர் கோயில், தலச்சேரி

லட்சுமி நரசிம்மர் கோயில் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் தலச்சேரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. தலச்சேரியையும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் காணப்படுகின்ற, கவுட சாரஸ்வத் பிராமணர்களின் முதன்மைக் கோயிலாகும். கோயிலும் மூலவரும் வடக்கு நோக்கி இருப்பது இக்கோயிலின் சிறப்பாகும். இக்கோயில் பொ.ஊ. 1831ல் நிறுவப்பட்டது.

லட்சுமி நரசிம்மர் கோயில், தலச்சேரி

வரலாறு

தொகு

பொ.ஊ. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கோவாவிலிருந்து இடம்பெயர்ந்த கவுட சாரஸ்வத் பிராமணர்கள் சிறிய குழுவாக தெல்லிச்சேரியில் குடியேறினர். அவர்கள் தெல்லிச்சேரியில் கோதண்டராமருக்கு ஒரு சிறிய சன்னதியைக் கட்டினர்.

கவுட சாரஸ்வத் பிராமணர்களில் ஒருவரான ஒரு பணக்கார வணிகர் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லட்சுமி நரசிம்மரின் சிலையை சன்னதிக்காக வழங்கினார். 1831ஆம் ஆண்டு பழைய கோயில் இருந்த இடத்தில் ஒரு முறையாக ஒரு கோயில் கட்டப்பட்டது. 1831ஆம் ஆண்டு சம்வத்ராஸ்ர வைஷாக மாச சுக்ல பஞ்சமி, திங்கட்கிழமை, ஷாகா சகாப்தத்தின் புனர்வசு நட்சத்திரத்தில் இத்திருப்பணியானது ஸ்ரீமத் சுமதீந்திர தீர்த்த சுவாமிகளால் மேற்கொள்ளப்பட்டது. அவர் வாரணாசியில் உள்ள காசி மடம் சமஸ்தானத்தின் 15வது பீடாதிபதி ஆவார்.[1]

கருவறை

தொகு

கர்ப்பகிரகம் எனப்படுகின்ற கருவறையில்தான் மூலவர் சிலை உள்ளது. இங்குள்ள கருவறை 'பஹுவேரா விதானம்' எனப்படும். அதாவது ஒரே கருவறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. இதில் உள்ளமூன்று அடுக்கு சிம்மாசனத்தில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

தெய்வங்கள்

தொகு

மூலவர், முதன்மைத்தெய்வங்கள்

தொகு

மையத்தின் மேல் நிலையில் லக்ஷ்மி நரசிம்மர் உள்ளார். அவருடைய இரு புறத்திலும் பட்டாபி நரசிம்மரும், வீர விட்டலரும் உள்ளனர். இரண்டாவது அடுக்கில் லக்ஷ்மணன், சீதையுடன் கோதண்டராமர் உள்ளார். இவர்களின் இருபுறமும் ஹயக்ரீவர், துணைவியருடன் வரதராஜர், கோபாலகிருஷ்ணர் உள்ளனர். கீழ் அடுக்கில் வெங்கடரமண பகவான், ஸ்ரீ தேவி, பூதேவியுடன் உள்ளார். இவர்களின் இருபுறமும் அனுமனும் கருடனும் உள்ளனர். சிம்மாசனத்திற்குக் கீழே ஒரு தனி பீடத்தில் சாலிகிராமங்களும் நாக தேவதைகளும் காணப்படுகின்றன.

உற்சவமூர்த்தி

தொகு

இங்கு வெங்கடரமணன் உற்சவமூர்த்தியாக உள்ளார்.

துணைத்தெய்வங்கள்

தொகு

இந்த கோயிலிலின் வெளித் திருச்சுற்றில் அனுமான், கணபதி, லக்ஷ்மி, விட்டோபா-ரகுமாயி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. அருகில் செப்புத்தகட்டால் வேயப்பட்ட கொடிக் கம்பம் உள்ளது. விழாவின்போது கோயில் கொடி ஏற்றப்படும். கோயில் குளத்தின் அருகே சிவனின் சன்னதி உள்ளது.[2] 

முக்கிய திருவிழாக்கள்

தொகு

பிரம்ம ரதோத்ஸவம், கார்த்திகைப் பௌர்ணமி, நவராத்திரி ஆகியவை இங்கு கொண்டாடப்படுகின்ற முக்கிய விழாக்களாகும்.

மேலும் பார்க்கவும்

தொகு

கவுட சாரஸ்வத் பிராமணர்

தொகு

கவுட சாரஸ்வத் பிராமணர்கள் (ஜிஎஸ்பி) பின்பற்றும் மடங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "GSB Kerala - Assuntos Diversos".
  2. "KERALA GSB Temples: Sree Lakshmi Narasimha Temple, Thalassery". 11 August 2009.

வெளி இணைப்புகள்

தொகு

ஜிஎஸ்பி கோயில்கள்

தொகு
  1. அனந்தேஸ்வரர் கோவில் - மஞ்சேஸ்வர்
  2. பழைய டிடி கோயில் - ஆலப்புழா
  3. கிருஷ்ண சுவாமி கோவில் - கோழஞ்சேரி
  4. வேணுகோபால சுவாமி கோவில் - புறக்காடு
  5. TD கோவில் - கொச்சி (கோஸ்ரீ புரம்)
  6. வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில் - சேந்தமங்கலம்
  7. ராமர் கோவில் - திரிபுனித்துரா
  8. வரதராஜ வெங்கடரமண ஆலயம் - காசர்கோடு
  9. வரதராஜ வெங்கடரமண ஆலயம் - குர்பூர்
  10. வெங்கடரமண கோவில் - மங்களூர்
  11. வெங்கடரமண கோவில் - கார்கால ( படு திருப்பதி )
  12. வெங்கடரமண ஆலயம் - முல்கி
  13. வீர விட்டல வெங்கட்ரமண சுவாமி கோவில் - பானேமங்களூர்
  14. ஸ்ரீ வீர விட்டலா கோவில் - கும்ப்ளே
  15. www.tdemple.org