லத்துவியாவின் சுதந்திர நினைவுச் சின்னம்
லத்துவியாவின் சுதந்திர நினைவுச் சின்னம்
Freedom Monument Brīvības piemineklis | |
---|---|
Riga Monument Agency Rīgas Pieminekļu aģentūra | |
Heroes killed in action during the Latvian War of Independence | |
திறப்பு | November 18, 1935 |
அமைவிடம் | 56°57′5″N 24°6′47″E / 56.95139°N 24.11306°E in Riga, Latvia |
வடிவமைப்பு | Kārlis Zāle |
TĒVZEMEI UN BRĪVĪBAI |
இந்த நினைவுச் சின்னம் லத்துவியாவில் ரீகா என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இது லத்துவிய சுதந்திரப் போரில் (1918-1920) மரணமடைந்த வீரர்களை பெருமைபடுத்துவதற்காக கட்டப்பட்டது. லத்துவியாவின் முக்கிய சுதந்திரப் போராட்ட நினைவுச் சின்னமாக கருதப்படுகிறது. இது 1935ல் திறக்கப்பட்டது. இதன் உயரம் 42 மீட்டர் ஆகும். இது கருங்கல் மற்றும் பொற்படிகக் கல் மற்றும் செம்பால் உருவாக்கப்பட்டது. இது பொதுமக்கள் கூடும் இடமாகவும், அரசாங்க விழாக்கள் நடைபெறும் இடமாகவும் உள்ளது.
லத்துவியாவில் அமைந்துள்ள இந்த சுதந்திர நினைவுச் சின்னத்தில் உள்ள சிலை மற்றுமதன் அடிப்பகுதி ஆகியவை 13 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.இவைகள் லத்துவியாவின் வரலாற்றையும்,கலாச்சாரத்தையும் எடுத்துரைப்பதாக உள்ளது.இதன் நடுப்பகுதி நாற்கோணவடிவில் அமைந்துள்ளது.மேல் நோக்கிச் செல்லச் செல்ல நாற்கோணத்தின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.இதன் மேல்பகுதியில் 19 மீட்டர் உயரமுள்ள செம்பினாலான சுதந்திரச் சிலை தனது இருகைகளிலும் பொன்முலாம் பூசப்பட்ட மூன்று நட்சத்திரங்களைத் தூக்கியவாறு உள்ளது.இந்த நினைவுச் சின்னத்தை உருவாக்கும் கருத்துப்படிவம் 1920-ல் லத்துவிய பிரதமந்திரி சிக்பிரைட்ஸ் அன்னா மெய்யரோவிக்ஸ் காலத்தில் தொடங்கப்பட்டது.இவர் காலத்தில் நினைவுச் சின்னத்தை வடிவமைப்பதற்கான போட்டி நடத்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.பல போட்டிகள் நடத்தப்பட்டபிறகு 1930-ல் இந்நினைவுச் சின்னம் கட்டப்பட்டது.இது லத்துவிய சிற்பி கார்லிஸ் சாலே என்பவர் ஒப்படைத்த"நட்சத்திரத்தைப் போல் மின்னுக" என்ற திட்டத்தை அடிப்படையாக வைத்து இது உருவாக்கப்பட்டது.தனியார் பங்களிப்புகளினால் இது கட்டப்பட்டது.
சோவியத் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து,1940-ல்லத்துவியா சோவியத்யூனியனால் இணைக்கப்பட்டது.சுதந்திர நினைவுச் சின்னம் அழிக்கப்படும் என்று கருதப்பட்டது.ஆனால் அம்மாதிரி எதுவும் நடக்கவில்லை.இந்நினைவுச் சின்னத்தைப் பாதுகாத்த பங்கு சோவியத் சிற்பி வீரா முகினாவையே சாரும் ஏனென்றால் அவர் இச்சின்னத்தை மிகுந்த கலைமதிப்புமிக்கதாகக் கருதினார்.சோவியத் பரப்புரையாளர்கள் இச்சின்னத்தின் மறைமுகமான பொருளை பொதுவுடைமைத் தத்துவத்திற்கு ஏற்ப மாற்ற எண்ணினர்.ஆனால் பொதுமக்களுக்கு இது சுதந்திர நினைவுச் சின்னமாகவே இருந்தது.ஜூன் 14,1987-ல் 5,000 பேர் இச்சின்னத்தின் முன்புகூடி போரில் பலியானவர்களை நினைவுகூடும் வகையில் அவ்விடத்தில் மலர்கள் வைத்தனர்.இந்நிகழ்வு சுதந்திரப் போராட்டை புனரமைப்பதாக இருந்தது.மூன்று ஆண்டுகளுக்குபிறகு இப்போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது.இப்போராட்டத்தில் சோவியத் ஆட்சி முடிவுற்று,லத்துவிய சகோதரத்துவம் நிலைநாட்டப்பட்டது.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகுமேலும் படிக்க
தொகு- Māra Caune (2002). Brīvības piemineklis: tautas celts un aprūpēts. Brīvības pieminekļa atjaunošanas fonds, Riga. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9984-19-253-9.
வெளியிணைப்புகள்
தொகு- Freedom monument (உருசிய மொழியில்)
- Latvijas brīvības dižākajam simbolam – jau 60 (இலாத்வியம்)
- Virtual tour of Old Riga (includes images and panoramas of the monument and its surroundings)
- View of the Freedom Monument Square (WebCam), balticlivecam.com