லத்மர் ஹோலி
லத்மர் ஹோலி (குச்சிகளின் ஹோலி) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள இரட்டை நகரங்களான பர்சானா மற்றும் நந்த்கான் ஆகியவற்றில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும், இந்த நகரங்கள் முறையே ராதா மற்றும் கிருஷ்ணாவின் நகரங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஹோலி பண்டிகை காலத்தில், ஆயிரக்கணக்கான இந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த நகரங்களுக்கு வண்ணமயமான இந்த திருவிழாவை கொண்டாட வருகிறார்கள். [1] ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் இவ்விழாக்கள் அரங்கபஞ்சமி அன்று முடிவடையும். [2] [3]
லத்மர் ஹோலி |
---|
தோற்றம்
தொகுதெய்வீக இணையர்களான ராதா மற்றும் கிருஷ்ணருடன் தொடர்புடைய புராணக்கதையுடன் இந்த திருவிழா தொடர்புடையது ஆகும், மீண்டும் அதன் சித்தரிப்புகளை உருவாக்க முயல்கிறது. புராணத்தின் படி, நந்தகானில் வசிக்கும் மற்றும் விருஷபானுவின் மருமகனாகக் கருதப்படும் பகவான் கிருஷ்ணர் தனது நேசத்திற்குரிய ராதா மற்றும் அவளது தோழிகளின் மீது வண்ணங்களை தெளிக்க விரும்பினார். ஆனால், கிருஷ்ணாவும் அவனது நண்பர்களும் பர்சானாவுக்குள் நுழைந்த, அவர்களை ராதாவும் அவளது தோழிகளும் பதிலுக்கு விளையாட்டுத்தனமாக குச்சிகளுடன் வரவேற்று அவர்களை பர்சானாவிலிருந்து வெளியே துரத்தினர். இதே கதையைப் பின்பற்றி, ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகையின்போது, பர்சானாவின் மருமகன்களாகக் கருதப்படும் நந்தகாவ்ன் மாவட்ட ஆண்கள் பர்சானாவுக்கு வருகை தருகிறார்கள், அவர்களை பர்சானாவின் பெண்கள் வண்ணங்கள் மற்றும் குச்சிகளால் (லத்தி ) எதிர்கொள்கிறார்கள். [4] இந்த கொண்டாட்டம் நந்தகோனின் ஆண்கள் மற்றும் பர்சானாவின் பெண்கள் ஆகிய இரு தரப்பினராலும் கேலி மற்றும் கிண்டல்களுடன் கொண்டாடப்படுகிறது.. [5]
காட்சித்தொகுப்பு
தொகு-
கிருஷ்ணர் கோவிலில் வண்ணங்களால் நனைக்கப்பட்ட மக்கள்
-
லத்மரின் போது ஆண்களுக்காக காத்திருக்கும் பெண்கள்
-
ஆண்களின் மீது லத்திகளைப் பயன்படுத்தும் பெண்கள்
-
பராசனாவில் வண்ணக் கொண்டாட்டத்தை சித்தரிக்கும் படம்
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Lathmar Holi 2014: 12 Stunning Photos That'll Transport You To India For When It Is Spring". Huffington Post, Canada. 13 March 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-07-31.
- ↑ "नंदगांव में लट्ठमार होली की उमंग". Aaj Tak, Dharma. 15 March 2011. பார்க்கப்பட்ட நாள் 2014-07-31.
- ↑ "Radha Rani Mandir Barsana | Barsana Temple | how to reach, timings". thedivineindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
- ↑ "What is Lathmar Holi? Why is it celebrated?". India Today (in ஆங்கிலம்). February 28, 2018. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
- ↑ Krishna in History, Thought, and Culture: An Encyclopedia of the Hindu Lord of Many Names: An Encyclopedia of the Hindu Lord of Many Names. ABC-CLIO. 2016-06-13.