லந்தாவு தொடுப்புப் பார்வையர் மையம்

லந்தாவு தொடுப்புப் பார்வையர் மையம் (Lantau Link Visitors Center) என்பது ஹொங்கொங், சிங் யீ தீவில், கவுலூன் பகுதியில் இருந்து லந்தாவு தீவை தொடுக்கும் சிங் மா பாலம் மற்றும் கப் சுயி முன் பாலம் ஆகிய கடல் மேல் கட்டப்பட்டுள்ள இரண்டு பாலங்களின் காட்சியைப் பார்க்க விரும்பும் பார்வையாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள பார்வையர் மையம் ஆகும்.

லந்தாவு தொடுப்பு பார்வையர் மையத்தில் இருந்து சிங் மா பாலத்தின் காட்சி
கப் சுயி முன் பாலத்தின் காட்சி, கீழே தெரிவது லந்தாவு தொடுப்பு பார்வையர் அருங்காட்சியகம்
லந்தாவு தொடுப்புப் பார்வையர் மையத்தில் இருந்து சிங் மா பாலத்தின் மாலைநேரக் காட்சி

இந்த "லந்தாவு தொடுப்புப் பார்வையர் மையம்" சிங் யீ தீவின் வடமேற்கு முனையில், கடலோரம் அமைந்துள்ள ஒரு மலைக்குன்றின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. அத்துடன் இந்த இரண்டு பாலங்கள் தொடர்பான அனைத்து விடயங்களையும் அறிந்துகொள்வதற்கான ஒரு அருங்காட்சியகம் ஒன்றும் இந்த இடத்தில் உள்ளது. இந்த இரண்டு பாலங்கள் தொடர்பான அனைத்து விடயங்களையும் இந்த பார்வையர் மையத்தில் அறிந்துகொள்ளலாம்.

பயன்படுத்தப்பட்ட ஆணிகள், கம்பிகள், பணிபுரிந்தோர் எண்ணிக்கை என எல்லாவற்றையும் விபரமாகவும், அதேவேளை அதன் மாதிரிகளையும் பொது பார்வையருக்காக வைக்கப்பட்டுள்ளன.

வரலாறு

தொகு