லஞ்ச திச்சன்

(லன்ஜ திச்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லஞ்ச திச்சன் என்பவன் கி.மு. 119 தொடக்கம் கி.மு. 109 வரை இலங்கையின் அனுராதபுர இராச்சியத்தை ஆண்ட அரசனாவான். இவனின் மறுபெயர் லமினி திச்சன் ஆகும். இவன் பத்து ஆண்டுகள் அனுராதபுர இராச்சியத்தை ஆண்டான்.

லஞ்ச திச்சன்
அனுராதபுர அரசர்
ஆட்சிகி.மு. 119 – கி.மு. 109
முன்னிருந்தவர்துலத்தன
கல்லாட நாகன்
அரச குலம்சாக்கிய வம்சம்
தந்தைசத்தா திச்சன்
இறப்புகி.மு. 109

ஆட்சி

தொகு

அனுராதபுர மன்னர்களுள் ஒருவனான சத்தா திச்சனது மூத்த மகனே லஞ்ச திச்சன். சிங்கள மக்களின் கலாச்சாரப்படி சத்தா திச்சன் அனுராதபுரத்தை ஆட்சிசெய்த போது லஞ்ச திச்சன் உருகுணையின் மன்னனாகத் திகழ்ந்தான்.

சத்தா திச்சன் இறந்த பின்பு மகா விகாரையின், பிக்குகளின் அறிவுறுத்தலின் படி அரசனின் இளைய மகனான துலத்தனை ஆட்சிபீடம் ஏற்றினர். இச்செய்தி கேட்ட லஞ்ச திச்சன், உருகுணையிலிருந்து அணிவகுத்துச் சென்று துலத்தனை ஆட்சியிலிருந்து விலக்கி, சிம்மாசனத்தை தான் கைப்பற்றிக் கொண்டான்.

ஆரம்பத்தில் லஞ்ச திச்சனுக்கும் பிக்குகளுக்கும் இடையே முறுகல் நிலையே காணப்பட்டது. எனினும் பின்பு லஞ்ச திச்சன் பௌத்த மதத்தை வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
லஞ்ச திச்சன்
பிறப்பு: ? ? இறப்பு: ? கி.மு.109
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர மன்னன்
கி.மு. 119–கி.மு. 109
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=லஞ்ச_திச்சன்&oldid=1770491" இலிருந்து மீள்விக்கப்பட்டது