லலிதா காமேஸ்வரன்

மருத்துவர் லலிதா காமேஸ்வரன், (பிறப்பு:27 சூலை 1930), சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக 12 சூலை 1988 முதல் 11 சூலை 1992 முடிய 4 ஆண்டுகள் செயலாற்றியவர்.[1] மருந்தியல் நிபுணரான லலிதா காமேஸ்வரன், நாவலர் சோமசுந்தர பாரதியின் மகளும், காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் மறைந்த காமேஸ்வரனின்[2] மனைவியுமாவர்.

கல்வி & பணிகள் தொகு

லலிதா காமேஸ்வரன் மதுரையில் உள்ள் புனித ஜோசப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி முடித்து, அமெரிக்கன் கல்லூரில் இடைநிலைக் கல்லூரிப் படிப்பை முடித்தார். 1952ல் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் முடித்தார். பின்னர் 1962ல் இலண்டனில் மருந்தியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் மதுரை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அவரது மாணவர்களில் மிகவும் நன்கு அறியப்பட்டவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு நிபுணர் டாக்டர் வி. மோகன் ஆவார்.இவர் தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக 12 சூலை 1988 முதல் 11 சூலை 1992 முடிய 4 ஆண்டுகள் செயலாற்றிய முதல் பெண் ஆவார்.

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லலிதா_காமேஸ்வரன்&oldid=3751002" இலிருந்து மீள்விக்கப்பட்டது