லாக்டால்டிகைடு

மெத்தில் கிளையாக்சால் வளர்சிதைமாற்றப் பாதையில் ஒர் இடைநிலை வேதிப்பொருள்

லாக்டால்டிகைடு (Lactaldehyde) என்பது C3H6O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெத்தில் கிளையாக்சால் வளர்சிதைமாற்றப் பாதையில் ஒர் இடைநிலையாக இது கருதப்படுகிறது. கிளிசரால் டியைதரசனேசு மெத்தில்கிளையாக்சாலை டி-லாக்டால்டிகைடாக மாற்றுகிறது. பின்னர் இது ஆல்டிகைடு டியைதரசனேசால் லாக்டிக் அமிலமாக ஆக்சிசனேற்றம் செய்யப்படுகிறது [1].

லாக்டால்டிகைடு
Skeletal formula
Ball-and-stick model of L-lactaldehyde
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சிபுரோப்பேனால்
வேறு பெயர்கள்
ஐதராக்சிபுரோப்பியோனால்டிகைடு
இனங்காட்டிகள்
598-35-6 Yes check.svgY
3946-09-6 (R) Yes check.svgY
3913-64-2 (S) Yes check.svgY
ChEBI CHEBI:18419 Yes check.svgY
ChemSpider 832 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C05999 Yes check.svgY
பப்கெம் 855
பண்புகள்
C3H6O2
வாய்ப்பாட்டு எடை 74.08 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

திறந்த சங்கிலி வடிவம், வளைய எமியசிட்டால் வடிவம், கரைசல், படிகம், ஒருபடி, இருபடி எனப்பல வடிவங்களில் லாக்டால்டிகைடு காணப்படுகிறது. படிகவடிவத்தில் 1,4-டையாக்சேன் வளைய கூடுடன் எமி அசிட்டால் இருபடிகளாக மூன்று சுழல்வடிவங்கள் தோன்றுகின்றன.

லாக்டால்டிகைடின் இருபடியாதல் வினையினால் தோன்றும் முப்பரிமாணமாற்றிய 1,4-டையாக்சேன்களின் கலவை

சமநிலையில் உள்ள கரைசலில் மிகக்குறைந்த அளவு ஒற்றைப்படியும் குறைந்தது ஒரு ஐந்து உறுப்பு வளைய இருபடியும் இருக்கின்றன [2].

மேற்கோள்கள்தொகு

  1. Huang PC, Miller ON (1958). "The metabolism of lactaldehyde, page 205". J. Biol. Chem. 231 (1): 201–5. பப்மெட்:13538961. http://www.jbc.org/content/231/1/201.full.pdf. 
  2. Takahashi, H (1983). "Conformational studies of DL-lactaldehyde by 1H-NMR, Raman and i.r. spectroscopy". Spectrochimica Acta Part A: Molecular Spectroscopy 39 (6): 569–572. doi:10.1016/0584-8539(83)80108-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாக்டால்டிகைடு&oldid=2583563" இருந்து மீள்விக்கப்பட்டது