லாபன்யா பிரபா கோஷ்
லாபன்யா பிரபா கோஷ் (லாபன்யா தேவி என்றும் அழைக்கப்படுகிறார்) மேற்கு வங்காளத்தின் புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இந்திய சுதந்திர இயக்கத் தியாகி ஆவார்.[4][5] ஏறத்தாழ 106 வயது வரை வாழ்ந்த இவர், தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் வறுமையால் பாதிக்கப்பட்டதால் ஆசிரமத்தில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர் தனது வாழ்நாள் முழுவதும் சாமானிய மக்களின் நீதிக்காக போராடினார்.[1]
லாபன்யா பிரபா கோஷ் | |
---|---|
பிறப்பு | லாபன்யா தேவி 14 ஆகத்து 1897[1][2] |
இறப்பு | 11 ஏப்ரல் 2003[3] புருலியா, மேற்கு வங்காளம் |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | மன்பும் சனனி[2] |
அறியப்படுவது | இந்திய சுதந்திர இயக்கம்[1] |
பிள்ளைகள் | அருண் சந்திர கோஷ் ஊர்மிளா மசூம்தார் அமல் சந்திர கோஷ் |
வாழ்க்கை
தொகுலாபன்யா 1897 ஆம் ஆண்டு ஆகத்து 14 அன்று பிறந்தார். இவர் முறையாக பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலும் இவரது தந்தையால் கற்பிக்கப்பட்டார். 1908 ஆம் ஆண்டில், தனது 11 ஆவது வயதில், புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய சுதந்திர இயக்கத்தின் உறுப்பினரான அதுல் சந்திர கோஷை மணந்தார். இவரது தந்தை ரிசி நபருண் சந்திராவும் ஒரு சுதந்திர போராட்ட வீரராக இருந்தார்.[1] இவர் தனது மருமகனுடன் சேர்ந்து புருலியாவின் தெல்கல்பாராவில் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். இது சுபாஷ் சந்திர போஸ், சித்தரஞ்சன் தாஸ் உள்ளிட்ட பல சுதந்திர போராட்ட வீரர்களால் பயன்படுத்தப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் மகாத்மா காந்தியும் இந்த ஆசிரமத்திற்கு வருகை தந்தார்.[3]
லாபன்யா புருலியாவிலிருந்து லோக் சேவாக் சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் ஆவார். பிரித்தானிய ஆட்சியின் போது புருலியாவில் பல போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். உப்புச் சத்தியாகிரகம் (1930) மற்றும் படகா சத்தியாகிரகம் (1945) ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்த இவர், பிரித்தானிய அரசாங்கத்தால் பல முறை கைது செய்யப்பட்டார். 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஒரு பகுதியாக புருலியாவில் லபான்யா மற்றும் இவரது மகள் கமலா இருவரும் கைது செய்யப்பட்டனர்.[6][7] இவர் மன்பும் பிராந்தியத்தின் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் தீவிர உறுப்பினராக இருந்தார், "மன்பும் சனனி" (மன்பும் மாவட்டத்தின் தாய்) என்று பிரபலமாக அறியப்பட்டார்.
புருலியாவில் தனது கணவரால் நிறுவப்பட்ட முக்தி வார இதழில் பல கட்டுரைகளை எழுதினார். 1961 இல் இவரது கணவர் இறந்த பிறகு பத்திரிகையின் ஆசிரியராகத் தொடர்ந்தார்.[8] இவரது மகன் அருண் சந்திர கோஷ் மற்றும் மகள் ஊர்மிளா மசூம்தார் ஆகியோரும் சுதந்திர போராட்டத்தில் இவருக்கு உறுதுணையாக இருந்தனர்.[9]
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் பீகாரில் பாசா போராட்டத்தில் பங்கேற்றார், இதற்காக இவர் கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த போராட்டத்தின் காரணமாக, புருலியா பீகாரிலிருந்து பிரிக்கப்பட்டு மொழியியல் அடிப்படையில் மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது.[3] மீண்டும் 1975 இல் அவசரகாலத்தில், இவர் கைது செய்யப்பட்டார்.
இவர் தனது 106 வயதில் 2003 ஏப்ரல் 11 அன்று இறந்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Chakraborty, Debajyoti (24 July 2001). "No freedom from poverty". The Times of India இம் மூலத்தில் இருந்து 4 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130104104526/http://articles.timesofindia.indiatimes.com/2001-07-24/kolkata/27223916_1_freedom-fighter-purulia-ghosh.
- ↑ 2.0 2.1 "INFORMATION & CULTURE : PURULIA,FAMOUS PERSONALITIES,Labanya Prabha Ghosh". purulia.gov.in.(govt.owned website). பார்க்கப்பட்ட நாள் 22 September 2012.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Suffering in the land of martyrs". The Statesman. Asia Africa Intelligence wire. 4 July 2003. http://www.accessmylibrary.com/coms2/summary_0286-23711387_ITM.
- ↑ Role of women in the freedom movement in Bengal, 1919-1947: Midnapore, Bankura, and Purulia district.
- ↑ "Purulia pioneer passes away". The Telegraph. 12 April 2003. Archived from the original on 3 May 2003. பார்க்கப்பட்ட நாள் 24 September 2012.
- ↑ Thakur, Bharti (2006). Women in Gandhi's Mass Movements. Deep and Deep Publications. p. 164. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176298186. பார்க்கப்பட்ட நாள் 24 September 2012.
- ↑ Kumari, Saroj (2005). Role of women in the freedom movement in Bihar, 1912-1947. Patna: Janaki Prakashan. pp. 138, 179. பார்க்கப்பட்ட நாள் 24 September 2012.
- ↑ Dr. Rajendra Prasad, Correspondence and Select Documents Vol 10. Vol. 10. New Delhi: Allied Publishers. 1984. p. 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170230021. பார்க்கப்பட்ட நாள் 24 September 2012.
- ↑ Chakraborty, Debajyoti (24 July 2001). "No freedom from poverty". The Times of India இம் மூலத்தில் இருந்து 4 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130104104526/http://articles.timesofindia.indiatimes.com/2001-07-24/kolkata/27223916_1_freedom-fighter-purulia-ghosh.