புருலியா
புருலியா (Purulia) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள புருலியா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது கொல்கத்தாவிற்கு வடமேற்கே 312.கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
புருலியா | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் புருலியா மாவட்டத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 23°20′N 86°22′E / 23.34°N 86.36°E | |
நாடி | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | புருலியா |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | புருலியா நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 140.18 km2 (54.12 sq mi) |
ஏற்றம் | 240 m (790 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,21,436 |
• அடர்த்தி | 870/km2 (2,200/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | வங்காளி |
• கூடுதல் மொழி | ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசி அழைப்பு குறியீடு | 91 (0)3252 |
வாகனப் பதிவு | WB-56 |
பாலின விகிதம் | 1000 ஆண்களுக்கு 955 பெண்கள் |
எழுத்தறிவு | 82.34% |
மக்களவைத் தொகுதி | புருலியா |
சட்டமன்றத் தொகுதி | புருலியா |
இணையதளம் | purulia |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 22 வார்டுகளும், 23,754 வீடுகளும் கொண்ட புருலியா நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,21,067 ஆகும். அதில் 62,351 ஆண்கள் மற்றும் பெண்கள் 58,716 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12653 (10.45%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 942 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.09% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 82.66%, முஸ்லீம்கள் 13.57%, கிறித்தவர்கள் மற்றும் பிறர் 2.22% ஆகவுள்ளனர்.[1]
போக்குவரத்து
தொகுபுருலியா தொடருந்து நிலையத்திலிருந்து கொல்கத்தா, கரக்பூர், ஆசன்சோல், சாப்ரா, போர்பந்தர், தாம்பரம், டாடா நகர், திப்ருகார், கவுகாத்தி, பாட்னா, பொக்காரா ஸ்டீல் சிட்டி, ராஞ்சி, புரி, புவனேசுவரம் நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கிறது.[2]
கல்வி
தொகு- சித்தோ கன்கோ பிர்ஷா பல்கலைக் கழகம்
- ரகுநாத்பூர் கல்லூரி
- அச்சுருராம் நினைவுக் கல்லூரி
- விக்ரம்ஜித் கோஸ்வாமி நினைவுக் கல்லூரி
- பல்ராம்பூர் கல்லூரி
- ஜெ. கே. கல்லூரி
- காசிப்பூர் மைக்கேல் மதுசூதன் மகாவித்தியாலயா
- நிஷ்தரணி மகளிர் கல்லூரி
- புருலியா அரசு பொறியியல் கல்லூரி
- புருலியா பல்நோக்கு தொழில்நுட்ப கல்லூரி
- சைனிக் பள்ளி
- இராமகிருஷ்ண மிசின் வித்தியா பீடம்
புருலியா ஆயுத வழக்கு
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Purulia