லாரன்சு வான் பில்

லாரன்சு வான் பில் (Laurens van Pyl, அண். 1634 - 17 செப்டம்பர் 1705) டச்சு குடியேற்றக் கால நிருவாகியாவார், இவர் ஒல்லாந்தர் கால இலங்கையின் ஆளுனராக 1680 டிசம்பர் 3 முதல் 1693 சூன் 19 வரை பதவியில் இருந்தார்.[1]

லாரன்சு வான் பில்
Laurens van Pyl
ஒல்லாந்தர் கால இலங்கையின் 12 வது ஆளுனர்
பதவியில்
3 டிசம்பர் 1680 – 19 சூன் 1693
முன்னையவர்ரிக்லாவ் வொன் கூன்சு டெ யொங்கே
பின்னவர்தோமசு வான் ரீ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅண். 1634
இறப்பு17 செப்டம்பர் 1705

லாரன்சு வான் பில் இலங்கையின் ஆளுனராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் யாழ்ப்பாணத்தின் தளபதியாகப் பதவியில் இருந்தார்.[2] 1678 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டையில் டச்சுத் தேவாலயம் ஒன்றை அமைத்தார். இத்தேவாலயம் பின்னர் அமெரிக்க மிசனறிகளின் பயன்பாட்டிற்காகக் கொடுக்கப்பட்ட்டது. 1679 இல் இறந்த இவரது மகனின் கல்லறை இக்கோயிலில் உள்ளது.[2]

கண்டியில் 20 ஆண்டுகளாக கண்டி மன்னன் இரண்டாம் இராஜசிங்கனால் சிறை வைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயக் கப்பல் தலைவர் இராபர்ட் நொக்சு சிறையில் இருந்து தப்பி அரிப்புக் கோட்டையை வந்தடைந்த போது லாரன்சு வான் பில் அவரை வரவேற்று கொழும்புக்கு அழைத்துச் சென்றார்.[2] லாரன்சு வான் பில் கண்டி மன்னருடன் நல்லுறவைப் பேணி வந்தார். கண்டியில் சிறை வைக்கப்பட்டிருந்த பல வெளிநாட்டவர்கள் இவரது காலத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Cahoon, Ben. "Dutch Governors". Worldstatesmen. பார்க்கப்பட்ட நாள் 1 மார்ச் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 2.2 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 145
  3. Humphry William Codrington. "A SHORT HISTORY OF LANKA, Chapter 9". பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2015.
அரசு பதவிகள்
முன்னர்
ரிக்லாவ் வொன் கூன்சு டெ யொங்கே
இலங்கையின் ஒல்லாந்த ஆளுனர்கள்
1680-1693
பின்னர்
தோமசு வான் ரீ
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரன்சு_வான்_பில்&oldid=3118434" இலிருந்து மீள்விக்கப்பட்டது