லிசு மக்கள்

லிசு மக்கள் மியான்மர், தென்மேற்கு சீனா, தாய்லாந்து மற்றும் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் ஓர் இனக்குழுவினர் ஆவர்.

சீனாவின் யுனான் மற்றும் சிச்சுவான் மாகாணத்தில் ஏறத்தாழ ஏழரை இலட்சம் லிசு மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் சீன மக்கள் குடியரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 இனக்குழுக்களில் ஓர் இனக்குழுவினர் ஆவர். மியான்மரில் ஏறத்தாழ ஆறு இலட்சம் லிசு மக்கள் உள்ளனர் மற்றும் லிசு இனக்குழு அங்கீகரிக்கப்பட்ட 135 இனக்குழுக்களில் ஒன்றாக உள்ளது. தாய்லாந்தில் ஏறத்தாழ ஐம்பது ஆயிரம் லிசு மக்கள் அங்குள்ள மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர்.[1]

லிசு பழங்குடியினர் இடையே 58 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு குடும்ப குலத்திற்கும் வெவ்வேறு குடும்பப்பெயர் உள்ளது.

வரலாறு தொகு

லிசு மக்களின் வரலாறு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பாடல்களின் வடிவத்தில் பரப்பப்பட்டது.[2]

தற்போதைய திபெத்தியர்கள் திபெத் பீடபூமிக்கு வருவதற்கு முன்பே கிழக்கு திபெத்தில் லிசு மக்கள் தோன்றியதாக நம்பப்படுகிறது. லிசு அறிஞர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி இவர்கள் அங்கிருந்து வடமேற்கு யுன்னானுக்குச் சென்றதாகக் குறிப்பிடுகிறது. லிசு மக்களின் மொழி பர்மிய மற்றும் திபெத்திய மொழிகளுடன் தொடர்புடையது.[3][4][5][6] ஹான் சீன மிங் வம்சத்திற்குப் பிறகு, கிபி 1140-1644 இல் கிழக்கு மற்றும் தெற்கு லிசு மக்களின் மொழிகள் மற்றும் கலாச்சாரம் ஹான் கலாச்சாரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன.[7][8] 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், யின்ஜியாங்கில் உள்ள லிசு மக்கள் பர்மாவிற்குச் செல்லத் தொடங்கினர் மற்றும் தெற்கு லிசு மக்களின் ஒரு பகுதி பின்னர் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடக்கு தாய்லாந்திற்குச் சென்றனர்.[8][9][10][11]

இந்தியாவில் ஏறத்தாழ ஐந்தாயிரம் லிசு மக்கள் உள்ளனர் மற்றும் அங்கு லிசு மக்கள் யோபின் என்று அழைக்கப்படுகிறார்கள். லிசு மக்கள் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் சிறுபான்மை பழங்குடியினரில் ஒன்றாவர். லிசு மக்களின் சில குழுக்கள் லெடோ சாலை வழியாக இந்தியாவை வந்தடைந்தனர். இவர்கள் பிரித்தானியரின் கீழ் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளிகளாகப் பணிபுரிந்தனர்.[12]

கலாச்சாரம் தொகு

லிசு கிராமங்கள் வழக்கமாக துவைப்பதற்கு மற்றும் குடிப்பதற்கு எளிதாக தண்ணீருக்கு அருகில் கட்டப்படுகின்றன.[7] இவர்களின் பாரம்பரிய வீடுகள் பொதுவாக தரையில் கட்டப்பட்டு, மூங்கில் சுவர்கள் மற்றும் மண் தரைகளை கொண்டுள்ளன. இருப்பினும் இப்பொது வசதியுள்ள லிசு மக்கள் மரத்தாலான அல்லது கான்கிரீட் வீடுகளில் வசிக்கின்றனர்.[2] லிசு மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை மேற்கொண்டனர்.[13][14]

மேற்கோள்கள் தொகு

  1. Ernst, Gabriel (21 October 2019). "'We try to not be Thai': the everyday resistance of ethnic minorities". New Mandala. https://www.newmandala.org/we-try-to-not-be-thai-the-everyday-resistance-of-ethnic-minorities/. பார்த்த நாள்: 20 April 2020. 
  2. 2.0 2.1 "Amazing People – doco stories & places". Amazing-people.com. Archived from the original on August 5, 2018. பார்க்கப்பட்ட நாள் 17 August 2018.
  3. Gros 1996
  4. Gros 2001
  5. Bradley 1997
  6. Matisoff 1986
  7. 7.0 7.1 Dessaint 1972
  8. 8.0 8.1 Hanks & Hanks, 2001
  9. George 1915
  10. Enriquez 1921
  11. Scott & Hardiman 1900–1901
  12. "A profile of Changlang District". Archived from the original on 2008-05-12. பார்க்கப்பட்ட நாள் 2008-06-07.
  13. Fox 2000
  14. Fox et al. 1995

ஆதாரங்கள் தொகு

  • Bradley, David, 1997. "What did they eat? Grain crops of Burmic groups", Mon–Khmer Studies 27: 161–170.
  • Dessaint, Alain Y, 1972. Economic organization of the Lisu of the Thai highlands Ph.D. dissertation, Anthropology, University of Hawaii.
  • Durrenberger, E. Paul, 1989. "Lisu Religion", Southeast Asia Publications Occasional Papers No. 13, DeKalb: Northern Illinois University.
  • Durrenberger, E. Paul, 1976. "The economy of a Lisu village", American Ethnologist 32: 633–644.
  • Enriquez, Major C.M., 1921. "The Lisu", Journal of the Burma Research Society 11 (Part 2), pp. 70–74.
  • Forbes, Andrew, and Henley, David, "Chiang Mai's Hill Peoples" in: Ancient Chiang Mai Volume 3. Chiang Mai, Cognoscenti Books, 2012. ASIN: B006IN1RNW
  • Fox, Jefferson M., 2000. "How blaming 'slash and burn' farmers is deforesting mainland Southeast Asia", AsiaPacific Issues No. 47.
  • Fox, Krummel, Yarnasarn, Ekasingh, and Podger, 1995. "Land use and landscape dynamics in northern Thailand: assessing change in three upland watersheds", Ambio 24 (6): 328–334.
  • George, E.C.S., 1915. "Ruby Mines District", Burma Gazetteer, Rangoon, Office of the Superintendent, Government Printing, Burma.
  • Gros, Stephane, 1996. "Terres de confins, terres de colonisation: essay sur les marches Sino-Tibetaines due Yunnan a travers l'implantation de la Mission du Tibet", Peninsule 33(2): 147–211.
  • Gros, Stephane, 2001. "Ritual and politics: missionary encounters in local culture in northwest Yunnan", In Legacies and Social Memory, panel at the Association for Asian Studies, March 22–25, 2001.
  • Hanks, Jane R. and Lucien M. Hanks, 2001. Tribes of the northern Thailand frontier, Yale Southeast Studies Monographs, Volume 51, New Haven.
  • Hutheesing, Otome Klein, 1990. Emerging Sexual Inequality Among the Lisu of Northern Thailand: The Waning of Elephant and Dog Repute, E.J. Brill, New York and Leiden.
  • McCaskill, Don and Ken Kampe, 1997. Development or domestication? Indigenous peoples of Southeast Asia. Chiang Mai: Silkworm Books.
  • Scott, James George and J.P. Hardiman, 1900–1901. Gazetteer of Upper Burma and the Shan States, Parts 1 & 2, reprinted by AMS Press (New York).
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிசு_மக்கள்&oldid=3899520" இலிருந்து மீள்விக்கப்பட்டது