லிண்டே–பிராங்க்–கரோ செயல்முறை
லிண்டே- பிராங்க்- கரோ செயல்முறை ( Linde–Frank–Caro process) என்பது ஐதரசன் தயாரிக்கின்ற ஒரு தயாரிப்பு முறையாகும். இம்முறையில் நீர்-வாயுவில் இருக்கும் ஒரு ஐதரசன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவை நீக்கப்பட்டு ஐதரசன் தயாரிக்கப்படுகிறது.[1][2] இச்செயல் முறை 1909 ஆம் ஆண்டில் அடால்ப் பிராங்க் என்பவரால் கண்டறியப்பட்டு கார்ல் வோன் லிண்டே மற்றும் எயின்ரிச் கரோ ஆகியவர்களால் மேம்படுத்தப்பட்டது[3].
செயல்முறை விளக்கம்
தொகு20 பார் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட நீர்வாயுவானது லிண்டே பிராங்க் கரோ உலைக்குள் செலுத்தப்படுகிறது. உலையில் உள்ள நீர் தூணில் பெரும்பாலான கார்பன் டை ஆக்சைடு மற்றும் கந்தகம் முதலியன நீக்கப்படுகின்றன. பின்னர் உள்ள எரிசோடா நிரப்பப்பட்ட குழாய்களில் எஞ்சியிருக்கும் கார்பன் டை ஆக்சைடு, கந்தகம்,மற்றும் நீர் ஆகியன வாயு ஓட்டத்தில் இருந்து நீக்கப்படுகின்றன. வாயு குளிர்விக்கும் அறைக்குள் செலுத்தப்பட்டு – 119 0 செல்சியசு வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான வாயு முழுவதும் ஒடுக்கமடைந்து திரவமாகின்றன. எஞ்சியிருக்கும் வாயு அடுத்த கலனுக்குள் அனுப்பப்படுகிறது. அங்கு -205 0 செல்சியசு வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்டு திரவமாக்கப்பட்ட நைட்ரசன் இருக்கிறது. இக்கலனில் வாயுவானது மேலும் குளிர்விக்கப்பட்டு இறுதி விளை பொருளாக ஐதரசன் வாயு உருவாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ The chemistry and manufacture of hydrogen Teed, P. Litherland (Philip Litherland), 1919
- ↑ Linde-Frank-Caro process
- ↑ 125 Years of Linde: A Chronicle p. 30.