லின்னேயஸ் தோட்டம்
லின்னேயசு தோட்டம் அல்லது லின்னேயசின் தோட்டம் (Linnaean Garden or Linnaeus' Garden) (சுவீடிய மொழி: Linnéträdgården) என்று அழைக்கப்பெறும் இந்த பழமைவாய்ந்த தாவரவியல் தோட்டம் சுவீடன் நாட்டின் உப்சாலா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் இத்தோட்டம் மீட்டமைக்கப்பட்டு புகழ்பெற்ற தாவரவியலாளரான காரோலசு லின்னேயசின் வகைப்பாட்டியல் முறைப்படி தாவரவியல் தோட்டமாக மாற்றப்பட்டது.
இத்தோட்டமானது முதன் முதலில் உப்சாலா பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை பேராசிரியரான ஒலவுசு ருத்பெக் என்பவரால் 1655 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது. பூங்காவின் அருகிலேயே ஒரு கட்டிடத்தையும் இவர் கட்டினார். 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இத்தோட்டத்தில் கிட்டத்தட்ட 1,800 வகையான பல்வேறு தாவர சிற்றினங்கள் இருந்தன. ஆனால் 1702 ஆம் ஆண்டில் உப்சாலா நகரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் இத்தோட்டம் பலத்த சேதமுற்று பல தாவரங்கள் கருகிப்போயின. பின்னர் 1741 ஆம் ஆண்டு கரோலஸ் லின்னேயஸ் இத்தோட்டத்தை புணரமைக்கும் பொறுப்பை ஏற்று தனது சுய யோசனையின் மூலம் இத்தோட்டத்தை மீட்டெடுத்தார். இப்பணி அனைத்தையும் உப்சாலின்னென்சின் தோட்டம் ( ஓர்தசு உப்சாலின்னென்சிசு -Hortus Upsaliensis) எனும் தனது நூலில் ஆவணப்படுத்தியுள்ளார் (1748).[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Botanical Garden History". Uppsala University. Archived from the original on 8 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 28 June 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
புற இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Linnaean Garden தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- பொதுவகத்தில் Linnaean Museum தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.