லிப்கே கோல்தூயிசு

லிப்கே பிஜ்டெலி கோல்தூயிசு (21 ஏப்ரல் 1921 - 7 மார்ச் 2008)[1] ஒரு நெதர்லாந்தைச் சார்ந்த ஓடுடைய கணுக்காலி (கிரசுடேசியன்) நிபுணர் ஆவார். இந்த துறையில் இவரது பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.[2] இவர் "நம் காலத்தின் மிகப் ஓடுடைய கணுக்காலி நிபுணர்".[3]

லிப்கே கோல்தூயிசு
Lipke Holthuis
கோல்தூயிசு (2006)
கோல்தூயிசு (2006)
பிறப்பு (1921-04-21)ஏப்ரல் 21, 1921
புரொபோலிங்கோ
இறப்புமார்ச்சு 7, 2008(2008-03-07) (அகவை 86)
லைடன்
துறைஓடுடைய கணுக்காலி
Alma materலைடன் பல்கலைக்கழகம்

கோல்தூயிசு கிழக்கு ஜாவா தீவில் உள்ள புரோபோலிங்கோவில் பிறந்தார். இவர் ஜனவரி 1946 23 அன்று லைடன் பல்கலைகழத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்றார்.[1] இவர் 1941ஆம் ஆண்டு ரிஜ்க்மியூஸியம் வேன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் துணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் 20ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஓடுடைய கணுக்காலி நிபுணராக இருந்தார். இவர் ஒட்டுடைய கணுக்காலி குறித்து 620 ஆவணங்களை வெளியிட்டு உள்ளார். இவற்றில் 108 லைடன் அருங்காட்சியகம் ஆய்விதழில் வெளியாகி உள்ளன. மொத்தம் 12,795 பக்கங்களை இவர் வெளியிட்டுள்ளார், இது ஆண்டுக்குச் சராசரியாக 185 பக்கங்களும் மற்றும் ஒரு ஆய்வுக்கட்டுரை சராசரியாக 21 பக்கங்களையும் கொண்டது.[4][5][6] இவை பல ஓடுடைய கணுக்காலிகளின் துணைக்குழுக்கள், அவற்றின் இயற்கை வரலாறு மற்றும் பெயரிடல் மற்றும் அவற்றின் வரலாறு குறித்ததாகும். இந்த நிலையான வெளியீடுகள் 428 புதிய வகைப்பாடு குழுக்களுக்கான விளக்கத்தைத் தந்தன. இதன் மூலம் 2 புதிய குடும்பங்கள், 5 துணைக் குடும்பங்கள், 83 பேரினங்கள் மற்றும் 338 சிற்றினங்கள் விவரிக்கப்பட்டன். 67 உயிரினங்களுக்கு 1953 முதல் 2009 இடையே இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஃபிரான்சன், சி.எச்.ஜே.எம்,, டெ கிரேவ், எஸ்., என்ஜி, பி.கே.எல் 2010ல், கூடுதலாக 50 இனங்களுக்கு கோல்தூயிசு பெயரினைச் சூட்டினர்.[7]

1972ஆம் ஆண்டில் கோல்தூயிசுக்கு நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கெளரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.[8]

கோல்தூயிசு குறித்த வெளியீடு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Charles H. J. M. Fransen & Martien J. P. van Oijen (2008). "L. B. Holthuis, ‘The institutional Memory’ of the Leiden Museum - Obituary". Contributions to Zoology 77 (3): 201–204. http://dpc.uba.uva.nl/cgi/t/text/get-pdf?c=ctz;idno=7703a03. பார்த்த நாள்: 17 February 2009. 
  2. Peter K. L. Ng (16 June 2000). "Development and future direction of biodiversity collections in Southeast Asia". Raffles Museum of Biodiversity Research. Archived from the original (DOC) on 13 February 2007.
  3. Chien-Hui Yang, I-Shiung Chen & Tin-Yam Chan (2008). "A new slipper lobster of the genus Petrarctus (Crustacea: Decapoda: Scyllaridae) from the West Pacific". Raffles Bulletin of Zoology Suppl. 19: 71–81 இம் மூலத்தில் இருந்து 6 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606035943/http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s19/s19rbz071-081.pdf. 
  4. Neil Cumberlidge & Sadie K. Reed (1 July 2003). "Scientists who have contributed to our knowledge of freshwater crab biology". Northern Michigan University. Archived from the original on 1 December 2005.
  5. Hans G. Hansson (14 November 1997). "Biographical Etymology of Marine Organisms – H". Tjärnö Marine Biological Laboratory. Archived from the original on 17 July 2012. பார்க்கப்பட்ட நாள் 13 December 2005.
  6. Gerlof Leistra (5 April 2008). Keizer van de kreeftachtigen. Elsevier magazine. பக். 101. 
  7. Fransen, C.H.J.M.; De Grave, S.; Ng, P.K.L. (2010). "In Memoriam Lipke Bijdeley Holthuis". in Fransen, C.H.J.M.. Studies on Malacostraca: Lipke Bijdeley Holthuis Memorial Volume. Crustaceana Monographs, 14. Leiden: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004174290. 
  8. "Honorary Doctors". www.ntnu.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிப்கே_கோல்தூயிசு&oldid=3113892" இலிருந்து மீள்விக்கப்பட்டது