லியுத்தேத்தியம்-இட்ரியம் ஆக்சியார்த்தோசிலிக்கேட்டு

லியுத்தேத்தியம்-இட்ரியம் ஆக்சியார்த்தோசிலிக்கேட்டு (Lutetium-yttrium oxyorthosilicate) என்பது Lu2(1-x)Y2xSiO5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மினுமினுக்கும் படிகமாக பயன்படுத்துவதே இதன் முக்கியமான பயனாகும். துகள் இயற்பியலில் பயன்படுத்தப்படும் மின்காந்த கலோரிமீட்டர்கள் உருவாக்க பொதுவாக இதைப் பயன்படுத்துகிறார்கள். உயர் அடர்த்தி, உயர் ஒளி வெளியீடு, விரைவான சிதைவு நேரம், மேம்பட்ட உறுதியான ஆற்றல் போன்றவை லியுத்தேத்தியம்-இட்ரியம் ஆக்சியார்த்தோசிலிக்கேட்டு படிகங்களின் சிறப்பியல்புகளாகும். ஆங்கிலத்தில் இச்சேர்மத்தை சுருக்கமாக லைசோ என்று சுருக்கப்பெயரால் அழைப்பார்கள்.

அடர்த்தி (கி/செ.மீ3) 7.4
அணு எண் 66
கதிர்வீச்சு நீளம் (செ.மீ) 1.10
சிதைவு மாறிலி (நானோநொடி) 40-44
உச்ச உமிழ்வு (நானோமீட்டர்) 428
ஒளி உற்பத்தி 190
ஒளிவிலகல் குறிப்பெண் 1.82
உச்ச கிளர்வு (நானோமீட்டர்) 375
கதிர்வீச்சு கடினத்தன்மை >106
உருகுநிலை (°செல்சியசு) 2050
கடினத்தன்மை (மோவின் அளவுகோல்) 5.8

மேற்கோள்கள்

தொகு