லி சிங்-யுயென்

லி சிங்-யுயென் (Li Ching-Yuen or Li Ching-Yun), (பிறப்பு:1677/1736 - இறப்பு:6 மே 1933) சீனா நாட்டின் மூலிகை மருத்துவரும், போர்க்கலை நிபுனரும், தந்திரோபாய ஆலோசகரும், 197 ஆண்டுகள் வாழ்ந்த உலகின் ஒரே மனிதராக கருதப்படுகிறார்.[1][2]இவரின் பிறந்த ஆண்டை முதுமையியல் அறிஞர்களால் நிர்ணயம் செய்ய இயலவில்லை..[3][4]

லி சிங்-யுயென்
李清雲
1927ல் லி சிங்-யுயென்
தாய்மொழியில் பெயர்李清雲
பிறப்பு1677/1736
இறப்பு6 மே 1933
கைசௌ, சோங்கிகிங், மாவட்டம், சிச்சுவான் மாகாணம், சீனா
மற்ற பெயர்கள்லீ சிங்
பணிமூலிகை மருத்துவர்
அறியப்படுவதுமூலிகை மருத்துவம், மற்றும் ஆன்மீகம் & யோகா மூலம் நீண்ட ஆயுள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்My Life Story
உயரம்2.13 மீட்டர் (7 அடி)

வாழ்க்கை வரலாறு

தொகு

லி சிங்-யுயென் பிறந்த ஆண்டு 1677 அல்லது 1736 எனக் குழப்பமாக உள்ளது. மூலிகை மருத்துவரான லி சிங்-யுயென், கோஜிபெர்ரி பழங்கள, சின்செங்கு, வல்லாரை மற்றும் லிங்சி காளான்கள் போன்ற மூலிகைத் தாவரங்களை மக்களுக்கு விற்பனை செய்தார். மேலும் இந்த மூலிகைகள் மற்றும் அரிசி ஒயினை உணவை உண்டு வாழ்ந்தார்.[5]இவர் தன் வாழ்நாளில் 23 அல்லது 24 மனைவிகளை மணந்தவர்.[6][7]இவர் தன் 24 மனைவிகள் மூலம் 200 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.[6][7]

நீண்ட வாழ்நாள் வாழ்வதற்கான மூலிகைகளத் தேடி லி சிங்-யுயென் சீனாவின் கான்சு, சான்சி மாகாணங்களுக்கும் மற்றும் திபெத், வியட்நாம், தாய்லாந்து மற்றும் மஞ்சூரியா போன்ற நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். [8]

இவர் தனது 197 அகவையில் 6 மே 1933 அன்று சீனாவின் சிச்சுவான் மாகாணததின் கை மாவட்டத்தில் காலமானர்.[7][8]

யாங் சென் என்பவரின் குறிப்புகளின்படி, லீ சிங்-யுயென் இறக்கும் வரை நல்ல பார்வைத் திறனுடனும், சுறுசுறுப்பாகவும், 7 அடி உயரம் கொண்டவராக இருந்தார்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. "史上第一長壽!256歲的李青雲 長壽秘訣只有一個字". Likenews.tw. Archived from the original on 31 December 2014. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
  2. "256歲娶24妻 李慶遠長壽秘訣公開 | 即時新聞 | 蘋果日報". Apple Daily (in சீனம்). Taiwan. 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
  3. Young Robert D.; Desjardins Bertrand; McLaughlin Kirsten; Poulain Michel; Perls Thomas T. (2010). "Typologies of Extreme Longevity". Current Gerontology and Geriatrics Research 2010: 8. doi:10.1155/2010/423087. பப்மெட்:21461047. 
  4. "Li Ching-Yuen: 256-Year-Old Man?". 28 February 2013.
  5. Castleman, Michael; Saul Hendler, Sheldon (1991). The healing herbs: the ultimate guide to the curative power of nature's medicines. Rodale Press. p. 206. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87857-934-1.
  6. 6.0 6.1 Harris, Timothy (2009). Living to 100 and Beyond. ACTEX Publications. p. 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56698-699-1.
  7. 7.0 7.1 7.2 Miami Herald (12 October 1929). "Living forever". The Evening Independent. https://news.google.com/newspapers?id=18gLAAAAIBAJ&pg=4235,1125251&dq=. 
  8. 8.0 8.1 "Li Ching-Yun Dead". The New York Times. 6 May 1933. https://www.nytimes.com/1933/05/06/archives/li-chingyun-dead-gayehisageas197-keep-quiet-heart-sit-like-a.html. 
  9. Yang, Sen. A Factual Account of the 250 Year-Old Good-Luck Man. Taipei, TW: Chinese and Foreign Literature Storehouse.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லி_சிங்-யுயென்&oldid=4170895" இலிருந்து மீள்விக்கப்பட்டது