லீலாவதி சுலோசனா

(லீலாவதி சுலோச்சனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லீலாவதி சுலோசனா 1936 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ராவ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் சி. எஸ். ஜெயராமன், பி. எஸ். கோவிந்தன், பி. எஸ். சிவபாக்கியம், டி. எம். சாரதாம்பாள் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்தனர்.[1]

லீலாவதி சுலோசனா
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பி. வி. ராவ்
மூலக்கதைஇதே தலைப்பிலான மேடை நாடகம்
நடிப்புசி. எஸ். ஜெயராமன்
பி. எஸ். கோவிந்தன்
பி. எஸ். சிவபாக்கியம்
டி. எம். சாரதாம்பாள்
மற்றும் பலர்
கலையகம்ஏஞ்சல் ஃபிலிம்ஸ்
வெளியீடு1936
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதை

தொகு

இளவரசிகளான இரு சகோதரிகள் ஒரே இளவரசனை விரும்புகின்றனர். இளவரசனை அடைவதற்காக அக்காள் கொலை, கடத்தல் உட்பட பல சூழ்ச்சிகள் செய்கிறாள். எனினும் அவை ஒன்றும் பலிக்கவில்லை. ஈற்றில் அவள் தற்கொலை செய்து கொள்ளவே, இளையவள் இளவரசனை திருமணம் செய்ய முடிகிறது.

நடிகர்கள்

தொகு

சி. எஸ். ஜெயராமன்
பி. எஸ். கோவிந்தன்
பி. எஸ். சிவபாக்கியம்
டி. எம். சாரதாம்பாள்
எஸ். எஸ். ராஜகோபாலன்
நாகர்கோவில் கே. மகாதேவன்
இசக்கி
சி. கே. செல்வாம்பாள்
கே. ஆர். லட்சுமி
டி. பி. மனோஜி ராவ்
டி. எம். பங்கஜம்
எம். எஸ். சுந்தரம்
சி. டி. ஜானகி

தயாரிப்பு விபரம்

தொகு

தமிழ் நாடக உலகின் தந்தையர் இருவரில் ஒருவரான பம்மல் சம்பந்த முதலியார் (மற்றவர் சங்கரதாஸ் சுவாமிகள்) 1895 ஆம் ஆண்டு எழுதிய நாடகம் இந்த லீலாவதி சுலோச்சனா. இதற்கு இரு சகோதரிகள் என இன்னொரு பெயரும் உண்டு.

இந்த நாடகத்தை ஸ்ரீநிவாச ஐயங்கார் என்பவர் ஆங்கிலத்தில் ஒரு நூலாக வெளியிட்டார். அந்த நூல் இப்போதும் லண்டனிலுள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் (British Museum) உள்ள தமிழ்ப் பிரிவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நாடகம் இந்தியாவிலும் பர்மாவிலும் நூற்றுக்கணக்கான தடவைகள் மேடையேறியுள்ளது.

சேலம் ஏஞ்சல் ஃபிலிம்ஸ் இந்த நாடகத்தை திரைப்படமாக்கியது. அக்காலத்தில் சென்னையில் படப்பிடிப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் கல்கத்தாவிலிருந்த நியூ தியேட்டர்ஸ் கலையகத்தில் படமாக்கப்பட்டது.

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்தில் அக்காலவழக்கப்படி மிக அதிகமான பாடல்கள் இடம் பெற்றிருந்தன. எல்லாமாக 45 பாடல்கள் இடம் பெற்றதாக பாட்டுப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சி. எஸ். ஜெயராமன், பி. எஸ். சிவபாக்கியம், சி. டி. ஜானகி ஆகியோர் பாடியிருந்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. கை, ராண்டார் (19 நவம்பர் 2011). "Leelavathi Sulochana 1936". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 20 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீலாவதி_சுலோசனா&oldid=3925660" இலிருந்து மீள்விக்கப்பட்டது