லீ ஆன் வால்டர்சு
லீ ஆன் வால்டர்சு (LeeAnne Walters) என்பவர் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் பிளிண்ட்டு நகரைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராவார். பிளிண்ட்டு நகரத்தின் நீர் நெருக்கடியை அம்பலப்படுத்துவதில் ஆற்றிய பங்களிப்பு மூலம் இவர் பிரபலமானார்.[1] நியூயார்க்கு நகரத்தை தலைமியிடமாகக் கொண்டுள்ள கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கும் நிறுவனத்தின் 2016 ஆம் ஆண்டிற்கான கருத்துச் சுதந்திர வீராங்கனை விருது லீ ஆன் வால்டர்சுக்கு வழங்கப்பட்டது.[2][3] 2017 ஆம் ஆண்டு வெளியான தொலைக்காட்சி நாடகத் திரைப்படமான பிளிண்ட்டு நச்சு நீர் பேரழிவை அடிப்படையாகக் கொண்ட படமாகும். இந்த திரைப்படத்தில் வால்டர்சு கதாபாத்திரத்தில் பெட்சி பிராண்ட்டு நடித்தார்.[4]பிளிண்ட்டு நகரத்தின் நீருக்கான போராட்டத்திற்காக 2018 ஆம் ஆண்டு வால்டர்சுக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[5][6]பிப்ரவரி 3, 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதியன்று வால்டர்சு பிளிண்ட்டு நகரத்தின் நீர் மாசுபாடு நெருக்கடியின் போது மேற்பார்வை மற்றும் சீர்திருத்தத்திற்கான ஐக்கிய அமெரிக்க மன்றக் குழுவின் முன் தனது பணிகள் குறித்து இவர் சாட்சியம் அளித்தார்.[7]
லீ ஆன் வால்டர்சு LeeAnne Walters | |
---|---|
தேசியம் | அமெரிக்கர் |
அறியப்படுவது | சுற்றுச்சூழல் ஆர்வலர் |
விருதுகள் | கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2018) கருத்துச் சுதந்திர வீராங்கனை விருது (2016) |
மேற்கோள்கள்
தொகு- ↑ Brueck, Hilary (24 February 2016). "A mother in Flint, Michigan collected more than 800 neighborhood water samples to help uncover the city's lead crisis". nordic.businessinsider.com. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
- ↑ "2016 PEN/Toni and James C. Goodale Freedom of Expression Courage Award: Lee-Anne Walters and Dr. Mona Hanna-Attisha". pen.org. 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
- ↑ "PEN America to Honor Flint Mother and Local Doctor for Speaking Out to Expose Poisoned Water Supply". pen.org. 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
- ↑ Saraiya, Sonia (27 October 2017). "TV Review: Lifetime's 'Flint' Starring Queen Latifah". Variety. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
- ↑ "Flint water activist LeeAnne Walters wins environmental prize". eu.freep.com. Associated Press. 23 April 2018. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
- ↑ "LeeAnne Walter". goldmanprize.org. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
- ↑ Former EM removed from witness list for Congressional hearing on Flint water The Flint Journal via MLive.com, February 3, 2016