லீ ராயல் மெரிடியன் சென்னை

லீ ராயல் மெரிடியன் (Le Royal Meridien) சென்னையில் அமைந்துள்ள ஒரு ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல் ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள, அண்ணா சாலையில் கிண்டிகத்திப்பாறை சந்திப்பில் உள்ளது. மெட்ராஸ் ஹில்டன் என்ற பெயருடன் சுமார் 1650 மில்லியன் முதலீட்டில் [1] தொடங்கப்பட்ட இந்த ஹோட்டல் பின்னர், லீ ராயல் மெரிடியன் சென்னை என்ற பெயருடன் திறக்கப்பட்டது. [2]

லீ ராயல் மெரிடியன்
Map
விடுதி சங்கிலிலீ மெரிடியன்
பொதுவான தகவல்கள்
இடம்இந்தியா
முகவரி1, ஜிஎஸ்டி சாலை, புனித தோமையார் மலை
சென்னை, தமிழ் நாடு
ஆள்கூற்று13°00′24″N 80°12′20″E / 13.006758°N 80.205528°E / 13.006758; 80.205528
திறப்புதிசம்பர் 30, 2000
உரிமையாளர்அப்பு ஹோட்டல்ஸ் லிமிடெடு.
மேலாண்மைStarwood Hotels & Resorts Worldwide, Inc
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை3
பிற தகவல்கள்
அறைகள் எண்ணிக்கை240
உணவகங்களின் எண்ணிக்கை3
வலைதளம்
www.starwoodhotels.com

வரலாறு

தொகு

லீ ராயல் மெரிடியன் ஹோட்டல், பிஜிபி குழுமத்தினால் ஹில்டன் உடன் மேலாண்மை ஒப்பந்தத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டது. இருப்பினும், அந்த ஒப்பந்தம் மார்ச் 2000 இல் முடிவடைந்த பின்னர் அந்தக் குழுமம் லீ மெரிடியன் ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட் உடன் ஒப்பந்தத்தினை மேற்கொண்டது. இதனால் ஹில்டன் ஹோட்டலாக வரவிருந்த ஹோட்டல் “லீ ராயல் மெரிடியன் சென்னை” என்ற பெயருடன் திறக்கப்பட்டது. ஏப்ரல் 12, 2000 இல் [3] இது சாதாரணமாக திறக்கப்பட்டு பின்னர் டிசம்பர் 30, 2000 இல் அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதியால் முறையாக திறக்கப்பட்டது.[4] மே 2005 இல், நீச்சல் குளத்தின் அருகில் விருந்தமைக்கும் இடம் உருவாக்கப்பட்டது. [5] 2006 ஆம் ஆண்டில், லீ ராயல் மெரிடியன் நிறுவனத்தை ஸ்டார்வுட் ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட் வார்ல்ட்வைட் நிறுவனம் வாங்கியதால் அதன் ஒரு பகுதியானது. [6]

ஹோட்டல்

தொகு

லீ ராயல் மெரிடியன் ஹோட்டல் 3.44 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு இடமானது அழகுத்தோற்றத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் 240 அறைகள் உள்ளன. இதில் 112 சாதாரண அறைகள், 57 டீலக்ஸ் அறைகள், 41 ராயல் கிளப் படுக்கையறைகள், 22 டீலகஸ் சூட்ஸ், 7 எக்ஸ்கியூட்டிவ் சூட்ஸ், 3 ராயல் சூட்ஸ் மற்றும் 1 பிரசிடென்ஷியல் அறை ஆகியவை அடங்கும்.[7] இங்கு அமைந்துள்ள விருந்து அரங்குகளில் ஒரே நேரத்தில் 1500 மக்களுக்கு விருந்தளிக்க இயலும், அத்துடன் 12 சந்திப்பிற்கான கூட்டமைக்கும் அரங்குகளும் இங்குள்ளன. நவரத்னா, கிலான்ட்ரோ மற்றும் காயல் ஆகிய மூன்று உணவகங்கள் இங்குள்ளன. இவை வெவ்வேறு விதமான உணவு வகைகளை பரிமாறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் நடைபாதை போன்ற இடம் சென்னையில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல்களில் உள்ளதைவிட பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. தூண்களே இல்லாமல் அமைந்தது, இதன் சிறப்பம்சம் ஆகும். 2009 ஆம் ஆண்டில், ஹோட்டல் புனரமைப்பதற்காகவும் கூடுதலாக 15 அறைகள் இணைப்பதற்காகவும் 750 மில்லியன் முதலீடாக செய்யப்பட்டது. [8]

விருதுகள்

தொகு

ஆசிய பசுபிக் பகுதிகளில் சிறந்த வணிக ஹோட்டலுக்கான விருதினை 2002 ஆம் ஆண்டு பசிபிக் ஏரியா டிராவல் ரைடர்ஸ் அசோசியேஷனிடம் இருந்து பெற்றது. இந்நிகழ்வு பெர்லினில் உள்ள இன்டர்நேஷனல் டிராவல் பௌர்ஸில் வைத்து நடைபெற்றது. அத்துடன் 2003 ஆம் ஆண்டு இன்னோவேட்டிவ் எச்ஆர் பிராக்டிஸஸ் எனும் விருதினை டெக்கன் ஹெரால்ட் அவென்யு வழங்கியது.

இருப்பிடம்

தொகு

ராயல் லீ மெரிடியன் ஹோட்டல் சென்னையின் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ளது. இது, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் இருந்து கோடம்பாக்கம், தியாகராய நகர் மற்றும் கிண்டி குதிரைப் பந்தயம் போன்ற இடங்கள் மிக அருகில் உள்ளன. இவை தவிர சிட்கோ தொழிற்பேட்டை, மெரினா கடற்கரை, கிண்டி தேசியப் பூங்கா மற்றும் பல சுற்றுலாத் தலங்கள் அருகில் அமைந்துள்ளன.

இடவசதி மற்றும் தங்கும் வசதிகள் உலகத்தரத்துடன் இங்கு அமைந்துள்ளது. அதிவேக இணைய வசதியினை தனது வளாகம் முழுவதும் அளித்துள்ளது. வணிகம் சம்பந்தப்பட்ட பயணங்களை மேற்கொள்பவர்களுக்கான அனைத்து வசதிகளும் தெளிவாக இங்கு செய்து கொடுக்கப்படுகின்றன. இவை தவிர வெளிப்புற நீச்சல் குளம், கூட்டம் நடத்துவதற்கான அரங்குகள் மற்றும் உடற்பயிற்சிக்கான சிறந்த சாதனங்கள் கொண்ட இடம் போன்றவை இந்த ஹோட்டலின் மதிப்பினை மேலும் உயர்த்துகின்றன.

குறிப்புகள்

தொகு
  1. Ravikumar, R.. "Appu Hotels plans 10 more units in TN". Business Line (Chennai: The Hindu). http://www.thehindubusinessline.com/todays-paper/tp-corporate/article1654192.ece. பார்த்த நாள்: 1 Dec 2011. 
  2. "Hilton withdraws from PGP hotel project". Business Line (Chennai: The Hindu). 9 March 2000. http://www.hindu.com/businessline/2000/03/09/stories/020918c8.htm. பார்த்த நாள்: 1 Dec 2011. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "PGP hotel project under Le Royal Meridien banner". Business Line (Chennai: The Hindu). 13 April 2000 இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125163108/http://hindu.com/businessline/2000/04/13/stories/14136078.htm. பார்த்த நாள்: 5 Aug 2012. 
  4. "Le Meridien opens in Chennai". Business Line (Chennai: The Hindu). 31 December 2000 இம் மூலத்தில் இருந்து 8 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130808060208/http://www.hindu.com/businessline/2000/12/31/stories/1431362q.htm. பார்த்த நாள்: 5 Aug 2012. 
  5. "Le Royal Meridien in Chennai adds a barbecue now". Business Line (Chennai: The Hindu). 16 May 2005. http://www.thehindubusinessline.in/2005/05/16/stories/2005051601291500.htm. பார்த்த நாள்: 5 Aug 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Le Meridien in Starwood fold". The Hindu (Chennai: The Hindu). 6 January 2006 இம் மூலத்தில் இருந்து 27 ஏப்ரல் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060427223349/http://www.hindu.com/2006/01/06/stories/2006010601781800.htm. பார்த்த நாள்: 5 Aug 2012. 
  7. "Le Royal Meridian Chennai Rooms". cleartrip.com.
  8. Narasimhan, T.E. (11 February 2009). "Appu Hotels lines up Rs 1000 cr expansion". Business Standard (Chennai: Business Standard) இம் மூலத்தில் இருந்து 25 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120425120326/http://business-standard.net.in/india/news/appu-hotels-linesrs-1000-cr-expansion/348595/. பார்த்த நாள்: 1 Dec 2011.