லுபுண்டு (Lubuntu ) என்பது, உபுண்டு இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு, உருவாக்கப்பட்ட வழங்கல்களில் ஒன்றாகும். குறைந்த அளவு திறனுள்ள கணினிகளை, திறம்பட இயக்கவல்ல ஒரு இயக்குதளமாக இது திகழ்கிறது.இதில் அடங்கியுள்ள அனைத்து மென்பொருட்களும் கட்டற்ற, திறந்த மூலநிரல் மென்பொருட்களாகும். இவ்வழங்கல் முற்று முழுதாக இலவசமாக கிடைக்கிறது. இது எல். எக்சு. டி. இ (LXDE) என்ற கணித்திரைப் புலத்தை இயல்பிருப்பாக கொண்டது ஆகும். இது கணினியின் ஆற்றல் வளங்களை(குறிப்பாக மின்கலத்தின் மின்ஆற்றலை) குறைந்த அளவே பயன்படுத்தி, சிறப்பாக செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.[1][2][3][4][5] இக்கணித்திரைப் புலத்தின் பெரும்பகுதி சி மொழியில் எழுதப்பட்டதாகும். மற்ற சிறுபகுதி மட்டுமே, பைத்தான் மொழியில் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
↑ 6.06.1LXDE Wiki (November 2008). "Ubuntu". Archived from the original on 27 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 3 December 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)