லுலுசார்-துடிபட்சார் தேசியப் பூங்கா

பாக்கித்தானின் தேசியப் பூங்கா

லுலுசார்-துடிபட்சார் தேசியப் பூங்கா (Lulusar-Dudipatsar National Park) என்பது பாக்கித்தானின் கைபர்-பக்துன்வாவின் மன்செரா மாவட்டத்தில் உள்ள ககன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்காவாகும். இந்த பூங்கா [1] 2003இல் உருவாக்கப்பட்டது. இயற்கை எழில் கொஞ்சும் துடிபட்சார் ஏரி மற்றும் லுலுசார் ஏரி மற்றும் சிகரங்கள் பூங்காவில் உள்ளன.

துடிபட்சார் ஏரியின் காலை நேரப் பிரதிபலிப்பு
சிவப்பு நிற மலர்கள் சூழ்ந்த துதிபட்சார்
லுலுசார்-துடிபட்சார் தேசியப் பூங்காவில் ஏரிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள்

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்

தொகு

மேற்கத்திய இமயமலை சபால்பைன் ஊசியிலையுள்ள காடுகளின் மரங்கள், புதர்கள், வற்றாத தாவரங்கள் மற்றும் மூலிகைகள் மற்றும் அதிக உயரமான மேற்கு இமயமலை அல்பைன் புதர் மற்றும் புல்வெளிகள் இங்குள்ள தாவரங்களில் அடங்கும். பூங்காவிலுள்ள சில விலங்கினங்களில் பனிச்சிறுத்தை, கருப்பு கரடி, மர்மோட், மரநாய், சிவிங்கிப் பூனை, சிறுத்தை ஆகியவை அடங்கும். பூங்காவின் ஏரிகளும் ஈரநிலங்களும் அங்கு குடியிருக்கும் விலங்குகளுக்கும், புலம்பெயர்ந்த நீர்ப்பறவைகளுக்கும் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்தவை.[1]

அணுகல்

தொகு

சாலையை கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மூலம் அணுகலாம். 2005இல் ஏற்பட்ட காஷ்மீர் நிலநடுக்கம் வடக்கு பாக்கித்தானின் அணுகலை மிகவும் கடினமாக்கியது. இருப்பினும், 2006 ஆம் ஆண்டு முதல் பாக்கித்தான் அரசாங்கம் ககன் பள்ளத்தாக்கில் சுற்றுலாவை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் புனரமைப்பு மற்றும் புதிய சுற்றுலா வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவையும் அடங்கும். [2]

பிராந்தியம்

தொகு

சைபுல் முலுக் தேசிய பூங்கா, சைபுல் முலுக் ஏரியுடன், ககன் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகள் லுலுசார்-துடிபட் தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ளது. பூங்காக்கள் இணைந்து 88,000 எக்டேர்கள் (220,000 ஏக்கர்கள்) பாதுகாக்கின்றன.[1]

துடிபட்சாரின் அகண்ட காட்சி

இதனையும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Government of Khyber-Pakhtunkhwa: Saiful Malook & Lulusar-Dodipat National Park, Naran, District Mansehra". Archived from the original on 2011-05-09. பார்க்கப்பட்ட நாள் 2010-07-22.
  2. www.president-of-pakistan-gov: "Tourism Revival plans" பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம்