2005 காஷ்மீர் நிலநடுக்கம்

2005 காஷ்மீர் நிலநடுக்கம் (2005 Kashmir earthquake) 8 அக்டோபர் 2005 அன்று பாகிஸ்தான் நேரப்படி காலை 8:50:39 மணிக்கு, 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்க மையமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரின் தலைமையிடமான முசாஃபராபாத் இருந்தது. இந்நிலநடுக்கத்தால் முசாஃபராபாத், பாலகோட் நகரங்கள் 70% அளவிற்கு பலத்த சேதமுற்றது.[8][9] மேலும் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் மூன்று மாவட்டப் பகுதிகள் பலத்த சேதமடைந்தது. பாகிஸ்தானின் மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் நிலச்சரிவாலும், கட்டிட இடிபாடுகளாலும், மக்கள் இறப்பு எண்ணிக்கை 86,000 –87,351 அளவிலும்; காயமடைந்தோர் எண்ணிக்கை 69,000 – 75,266 அளவிலும் இருந்தது. மேலும் 2.8 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர். ஆப்கானிஸ்தான் மற்றும் திபெத் பகுதிகளிலும் இந்நிலநடுக்கத்தின் தாக்கங்கள் உணரப்பட்டது.

2005 காஷ்மீர் நிலநடுக்கம்
2005 காஷ்மீர் நிலநடுக்கம் is located in பாக்கித்தான்
Kabul
Kabul
Islamabad
Islamabad
Lahore
Lahore
2005 காஷ்மீர் நிலநடுக்கம்
நிலநடுக்க அளவு7.6 Mw [1]
ஆழம்15 km (9.3 mi) [1]
நிலநடுக்க மையம்34°27′N 73°39′E / 34.45°N 73.65°E / 34.45; 73.65 [1]
வகைOblique-slip
பாதிக்கப்பட்ட பகுதிகள்பாகிஸ்தான், இந்தியா
அதிகபட்ச செறிவு7.6 [2]
நிலச்சரிவுகள்ஆம் [3]
பின்னதிர்வுகள்5.9 Mw 8 அக்டோபர் 2005, நேரம் 03:57 [4]
5.8 Mw 8 Oct at 03:58 [5]
6.4 Mw 8 Oct at 10:46 [6]
உயிரிழப்புகள்இறப்பு 86,000–87,351 [7]
காயமடைந்தோர் 69,000–75,266 [7]
2.8 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர்.[7]
மண்டல கண்டத்திட்டுகள்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 ISC (2014), ISC-GEM Global Instrumental Earthquake Catalogue (1900–2009), Version 1.05, International Seismological Centre
  2. USGS. "M7.6 - Pakistan". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை.
  3. Bulmer, M.; Farquhar, T.; Roshan, M.; Akhtar, S. S.; Wahla, S. K. (2007), "Landslide hazards after the 2005 Kashmir earthquake", EOS, 88 (5): 53–68, Bibcode:2007EOSTr..88...53B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1029/2007eo050001
  4. USGS. "M5.9 - Pakistan". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை.
  5. USGS. "M5.8 - Pakistan". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை.
  6. USGS. "M6.4 - Pakistan". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை.
  7. 7.0 7.1 7.2 USGS (4 September 2009), PAGER-CAT Earthquake Catalog (Earthquake ID 20051008035040), Version 2008_06.1, ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை
  8. "Pak in panic as quake rocks Kashmir" பரணிடப்பட்டது 2015-12-08 at the வந்தவழி இயந்திரம் Reuters, The Financial Express, 19 October 2005. Retrieved 23 February 2006.
  9. "Pakistan: A summary report on Muzaffarabad earthquake" ReliefWeb, 7 November 2005. Retrieved 23 February 2006.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=2005_காஷ்மீர்_நிலநடுக்கம்&oldid=3967661" இலிருந்து மீள்விக்கப்பட்டது