லூகர் கைத்துப்பாக்கி

லூகர் கைத்துப்பாக்கி (Luger pistol) என்பது ஜோர்ஜ் லுகர், மற்றும் கியுகோ போர்சாட் என்ற இரண்டு தலைசிறந்த செருமானிய வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட அரைத் தானியங்கி 9மிமீ பிஸ்டல் வகை கைத்துப்பாக்கி.

லூகர் பி08
Luger P08 (Parabellum)
Luger P08
வகைபகுதித்தானியங்கி கைத்துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடு செருமானியப் பேரரசு
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்ததுசெருமனி (1904–1945)
சுவிட்சர்லாந்து (1900–70கள்)
ஏனைய நாடுகள் (1900–இன்று)
போர்கள்முதல் உலகப் போர், எசுப்பானிய உள்நாட்டுப் போர், இரண்டாம் உலகப் போர், இரண்டாம் சீன-சப்பானியப் போர், சீன உள்நாட்டுப் போர், ஏனையவை
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்கியார்க் லூகர்
தயாரிப்பாளர்Deutsche Waffen und Munitionsfabriken, Imperial Arsenals of Erfurt and Spandau, Simson, Krieghoff, Mauser], Vickers Ltd, Waffenfabrik பேர்ன்
உருவாக்கியது1900–1945
அளவீடுகள்
எடை871 கி. (1.92 இறா)
நீளம்222 மிமீ (8.74")
சுடு குழல் நீளம்95–200 மிமீ
(3.74–7.87")

தோட்டா7.65×21 மிமீ Parabellum
9×19 மிமீ Parabellum
.45 ACP
வெடிக்கலன் செயல்Toggle-locked, short recoil
சுடு விகிதம்பகுதித் தானியங்கி
வாய் முகப்பு  இயக்க வேகம்350–400 மீ/செ (1148–1312 அடி/செ; 9 மிமீ, 100 மிமீ barrel)
செயல்திறமிக்க அடுக்கு50 மீ (9 மிமீ, 100 மிமீ barrel; short barrel)
கொள் வகை8-round detachable box magazine, 32-round detachable drum
காண் திறன்Iron sights

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் பலவிதமான மாறுதல்களுடன் இந்த கைத்துப்பாக்கியின் முந்தைய மாதிரி திருத்தி அமைக்கப்பட்டு 1908 ஆம் ஆண்டு 08 பிஸ்டல் என்ற பெயருடன் ஜெர்மானிய படைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

முதலாம் உலக போரின் முடிவில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் 08 பிஸ்டல் கைத்துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டன. இவைகளின் எளிய கையாளும் முறை மற்றும் நம்பகத்தன்மை காரணமாக நெதர்லாந்து, சுவீடன், பின்லாந்து, சுவிச்சர்லாந்து, ஸ்பெயின், போர்துக்கல், பிரேசில், லாட்வியா, துருக்கி, ஈரான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

1930 முதல் ஒபர்ண்டோவ் (oberndorf) என்னும் இடத்தில் அமைந்துள்ள மௌசர் (mauser) என்னும் தொழிற்சாலையில் 08 பிஸ்டல்கள் தயாரிக்கப்பட்டன. ஆனி மாதம் 1942 உற்பத்தியை நிறுத்திக்கொண்டு தனது சேவையில் இருந்து ஓய்வு பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூகர்_கைத்துப்பாக்கி&oldid=2186653" இலிருந்து மீள்விக்கப்பட்டது