லூசி பின்சன்

பிரான்சு நாட்டு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

லூசி பின்சன் (Lucie Pinson) பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராவார். காலநிலை அவசரநிலை மற்றும் பல்லுயிர் இழப்பு ஆகியவற்றின் பின்னணியில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமான மீட்டெடுக்கும் நிதி அமைப்பை நிறுவி அதன் இயக்குனராகவும் செயல்பட்டுக் கொண்டுள்ளார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிக முக்கியமான விருதாக கருதும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது 2020 ஆம் ஆண்டு லூசி பின்சனுக்கு வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு இவ்விருது இவருடன் சேர்த்து ஆறு பேருக்கு வழங்கப்பட்டது. கார்பன்-எரிசக்தி அடிப்படையிலான தொழில்களில் இனி முதலீடு செய்ய வேண்டாம் என 16 பிரெஞ்சு வங்கிகளை நம்பவைத்த ஒரு பிரச்சாரத்தை இயக்கத்தை லூசி வழிநடத்தினார். [1]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

லூசி பின்சன் 1985 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டின் ஆறாவது பெரிய நகரமான நாண்டசு நகரத்தில் பிறந்தார். அரசியல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பாடங்களைப் படித்தார். 2013 ஆம் ஆண்டு இவர் பூமியின் நண்பர்கள் என்ற அமைப்பில் சேர்ந்தார். 2020 ஆம் ஆண்டில் லூசி பின்சன் மீட்டெடுக்கும் நிதி நிறுவனத்தை நிறுவினார்.[2]புதிய நிலக்கரி திட்டங்கள் மற்றும் நிலக்கரி நிறுவனங்களுக்கான நிதியுதவியை நிறுத்த பிரான்சின் பெரிய வங்கிகளுக்கு வெற்றிகரமாக அழுத்தம் கொடுப்பது போன்றவை இந்நிறுவனத்தின் நோக்கங்களாகும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூசி_பின்சன்&oldid=3146052" இலிருந்து மீள்விக்கப்பட்டது