லூலா த சில்வா

லூலா என அழைக்கப்படும் லூயிசு இனாசியோ லூலா த சில்வா (Luiz Inácio Lula da Silva (பிரேசிலிய போர்த்துக்கீசம்: [luˈiz iˈnasju ˈlulɐ dɐ ˈsiwvɐ]  ( கேட்க); பிறப்பு: 27 அக்டோபர் 1945),[1] பிரேசில் அரசியல்வாதியும், தொழிற்சங்கவாதியும் ஆவார். இவர் 2023 சனவரி 1 முதல் பிரேசிலின் 39-ஆவது அரசுத்தலைவராகப் பதவியில் உள்ளார்.[2][3] தொழிலாலர் கட்சியின் உறுப்பினரான இவர், முன்னதாக 2003 முதல் 2011 வரை 35-ஆவது அரசுத்தலைவராகப் பதவியில் இருந்துள்ளார்.[4] லூலா, மூன்றாவது முறையாக பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரேசில் அரசுத்தலைவரும், தேர்தலில் தற்போதைய அரசுத்தலைவரைத் தோற்கடித்த முதல் நபரும் ஆவார். 77 வயதில், பதவியேற்பின் போது இவர் மிகவும் வயதான அரசுத்தலைவரும் ஆவார்.

லூலா த சில்வா
2023 இல் லூலா
பிரேசிலின் அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 சனவரி 2023
முன்னையவர்சயீர் பொல்சனாரோ
பதவியில்
1 சனவரி 2003 – 31 திசம்பர் 2010
முன்னையவர்பெர்னாண்டோ என்றிக்கே கார்தோசோ
பின்னவர்டில்மா ரூசெஃப்
தொழிலாளர் கட்சியின் தேசியத் தலைவர்
பதவியில்
15 சூலை 1990 – 24 சனவரி 1994
முன்னையவர்லூயிசு குசிக்கென்
பின்னவர்உரூயி பல்காவோ
பதவியில்
9 ஆகத்து 1980 – 17 சனவரி 1988
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்ஒலீவியா தத்ரா
பிரதிநிதிகள் சபை உறுப்பினர்
பதவியில்
1 பெப்ரவரி 1987 – 1 பெப்ரவரி 1991
தொகுதிசாவோ பாவுலோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
லூயிசு இனாசியோ த சில்வா

27 அக்டோபர் 1945 (1945-10-27) (அகவை 79)
கேட்டசு, பெர்னம்புகோ, பிரேசில்
அரசியல் கட்சிதொழிலாளர் கட்சி (1980 முதல்)
துணைவர்கள்
  • மரியா ரிபெய்ரோ
    (தி. 1969; இற. 1971)
  • மரிசா காசா
    (தி. 1974; இற. 2017)
  • ரொராஞ்சலா த சில்வா
    (தி. 2022)
பிள்ளைகள்5
கல்விதொழில்துறை பயிற்சிக்கான தேசிய சேவை
வேலைஉலோகப் பணியாளர், தொழிற்சங்கவாதி
கையெழுத்து
இணையத்தளம்lula.com.br

இவர் ஏழ்மைப் பின்புலத்தில் இருந்து போராடி முன்வந்தவர். இவர் தொழிலாளர் சங்கங்களில் அடிமட்ட நிலையிலும் தலைமைத்துவ மட்டத்திலும் செயலாற்றியவர். இவர் இடதுசாரி மற்றும் மாற்று சிந்தனை அரசியல் தத்துவத்தை கொண்டவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Jeff Wallenfeldt (10 April 2018). "Luiz Inácio Lula da Silva". Encyclopædia Britannica. Archived from the original on 2 July 2019. பார்க்கப்பட்ட நாள் 27 July 2018.
  2. Magalhaes, Luciana; Pearson, Samantha (2022-10-30). "Brazil's Luiz Inácio Lula da Silva Wins Presidential Election, Beating Jair Bolsonaro". The Wall Street Journal (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-01.
  3. Phillips, Tom; Malleret, Constance (2022-10-30). "Lula stages astonishing comeback to beat far-right Bolsonaro in Brazil election". The Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-01.
  4. "Luiz Inácio Lula da Silva". Biblioteca da Presidência da República. Archived from the original on 22 March 2017. பார்க்கப்பட்ட நாள் 30 June 2017.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
லூலா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூலா_த_சில்வா&oldid=3635239" இலிருந்து மீள்விக்கப்பட்டது