லெமோவிசிகள்
லெமோவிசிகள் (Lemovices) எனப்படுவோர் நடு ஐரோப்பாவில் வாழ்ந்த கௌலிய பழங்குடியின மக்கள் ஆவர். கி.மு 700 மற்றும் கி.மு 400 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பண்டைய பிரான்சு நாட்டில் இலிமவுசின் மற்றும் பொய்ட்டுவ் பிராந்தியங்களில் தங்களுக்கான பகுதியை உருவாக்கிக் கொண்டு வாழ்ந்தார்கள். உரோமானிய வரலாற்றுக் காலத்தில் தன்னாட்சிப் பகுதியாக விளங்கிய துரோடிங்கம் இவர்களுடைய தலைநகரமாக இருந்தது. லிமோகெசு நகரம் என்றும் இத்தலைநகரம் அழைக்கப்பட்டது. எல்ம் மரம் [1] என்ற பொருள் கொண்ட லிமோ என்ற சொல்லும் அதை ஆயுதமாக்கி வெற்றி பெற்றவர்கள் என்ற பொருள் கொண்ட விசெசு என்ற சொல்லும் லெமோகெசு என்ற சொல்லை உருவாக்கியதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இவர்களுடை ஈட்டி எல்ம் மரத்தால் உருவாக்கப்பட்டதாகும். லெமோவிசிகள் தங்களுடைய பெயரை லெமோகெசு, லெமவுசின் நகரங்களுக்கு சூட்டினர்.
23-அகுன், 19-அர்கெண்டேட்டு, 87-பிளாண்டு, 19-பிரைவ்-லா-கெய்லார்டு, 16-சேசெனான், 87-சட்டெயு-செர்விக்சு, 87-ரேங்கான், 19-எசாண்டோன், 19-உசெல் போன்ற பகுதிகள் இவர்களுடன் தொடர்புடைய பிற பகுதிகளாகும். டிண்டிக்நாக் குடியிருப்பில் இவர்களது சரணாலயமாக அமைந்திருந்தது. காரின்சு போன்ற தனித்தன்மை வாய்ந்த காற்று இசைக் கருவி இங்கு காணப்பட்டது [2]. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் லெமோவிசிகள் வசித்த லெமவுசின் குடியேற்றத்தில் தங்கச் சுரங்கங்களைக் கண்டறிந்தனர். குறிப்பாக மேற்கு-மத்திய பிரான்சில் உள்ள மையப்பகுதியின் தென்மேற்கு பிராந்தியத்தில் இச்சுரங்கங்கள் இருந்தன [3]. லெமோவிசிகள் தங்களுடைய தங்கம் தொடர்பான செய்திகளை வெளிப்படுத்தாத காரணத்தால் இந்த கண்டுபிடிப்பு அந்நுட்பங்களை அடையாளம் காணவும் சுரங்க நடவடிக்கைகளின் காலவரிசையை அறியவும் அனுமதித்தது. [3]. குறிப்பாக கி.மு 52 ஆம் ஆண்டு நடைபெற்ற அலிசிய போரில் யூலியசு சீசருக்கு எதிராக 10,000 லெமோவிசி பழங்குடியின வீரர்கள் போரிட்டனர்.[4], அப்போரில் லெமோவிசிகளின் தலைவர் செடுலாசு கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Xavier Delamarre, Dictionnaire de la langue gauloise, Éditions Errance, Paris, 2003.
- ↑ http://tintignac.wix.com/tintignac-naves#!english/c11e3 Official website of Tintignac-Naves
- ↑ 3.0 3.1 Morteani, Giulio; Northover, Jeremy (2013). Prehistoric Gold in Europe: Mines, Metallurgy and Manufacture. Dordrecht: Kluwer Academic Publishers. p. 219. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789048145003.
- ↑ Waldman, Carl; Mason, Catherine (2006). Encyclopedia of European Peoples. New York: Infobase Publishing. pp. 484. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0816049645.
புற இணைப்புகள்
தொகு- Who Was Who in Roman Times பரணிடப்பட்டது 2016-06-20 at the வந்தவழி இயந்திரம்
- Lemovices at the Galician Wikipedia