லையேட்டு அயனி
லையேட்டு அயனி (lyate ion) என்பது ஒரு கரைப்பான் மூலக்கூறை புரோட்டான் நீக்கம் செய்து தருவிக்கப்படும் ஒரு எதிர்மின் அயனியாகும். [1]. புரோட்டான் நீக்கம் செய்யப்பட்ட நீரில் இருந்து கிடைக்கும் ஐதராக்சைடு அயனியும், மெத்தனாலை புரோட்டான் நீக்கம் செய்தால் கிடைக்கும் மெத்தாக்சைடு (CH3O−) அயனியும் இதற்கு உதாரணங்களாகும். இதே போல ஒரு கரைப்பான் மூலக்கூறை புரோட்டானேற்றம் செய்வதால் உருவாகும் நேர்மின் அயனி லையோனியம் அயனி எனப்படுகிறது.