லை-ஃபை
லை-ஃபை (Li-Fi, Light fidelity, ஒளி மெய்நிலை) என்பது மனிதனின் கண்ணுக்குப்புலப்படும் ஒளியின் வீச்சைப்பயன்படுத்தி கம்பி இல்லாமல் ஒய்-ஃபை போன்ற கைபேசி வலைப் பின்னல்களுக்கான ஒரு புதிய வணிகக்குறியீட்டு முறையாகும். இந்த முறையானது வைபை முறையைவிட 100 மடங்கு வேகமாக செயல்படும் திறன் கொண்டதாகும். அதேபோல் வைபையில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைகளைவிட 10,000 மடங்கு பெரியதாக இருக்கும். [1] இக்கண்டுபிடிப்பின் மூலம் 2022 ஆம் ஆண்டுக்குள் பல துறைகள் விரிவடைந்து 11,300 கோடி டாலர்கள் வரை பொருளாதார முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் என பேராசிரியர் ஹாரல்டு தெரிவித்துள்ளார். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ இணையப் பயன்பாடு அறிமுகமாகிறது[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ இணைப்பை விட 100 மடங்கு வேகமானது: எல்இடி பல்பு வழியாக இணைய வசதி தி இந்து தமிழ் 20 பிப்ரவரி 2016