லோகா சிங் (நாடகம்)
லோகா சிங் | |
---|---|
கதை | ராமேஷ்வர் சிங் காசியாப் |
வெளியீட்டு திகதி | 1954 (அனைத்திந்திய வானொலி நிலையம், பட்னா) |
மொழி | போச்புரி |
மையம் | சமூகப்பிரச்சனை |
கருப்பொருள் | நாடகம் |
லோகா சிங் (Loha Singh)(போச்புரி: 𑂪𑂷𑂯𑂰 𑂮𑂱𑂁𑂯) காஷ்யப் எழுதிய போச்புரி நாடகம் ஆகும். இந்த நாடகம் லோஹா சிங் என்ற ஓய்வுபெற்ற பிரித்தானியத் தரைப்படை வீரரைச் பற்றியது. இந்த நாடகம் அனைத்திந்திய வானொலி பட்னாவின் வழக்கமான வாராந்திர ஒலிபரப்பு அம்சமாக இருந்தது.[1]
கதாபாத்திரங்கள்
தொகு- லோகா சிங், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்
- காதரன் கா தாய், லோகா சிங்கின் மனைவி [2]
கதை
தொகுமுதல் உலகப் போரை ஆப்கானித்தானில் நடத்திய லோகா சிங்கைச் சுற்றியே நாடகம் நகர்கிறது.[3] இதன் அத்தியாயங்கள் நாட்டில் நடக்கும் அக்காலச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.[4]
பிரபலம்
தொகுஇந்த நாடகம் 1950களில் பட்னாவில் உள்ள அனைத்திந்திய வானொலியில் வாராந்திர ஒலிபரப்பினால் மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றது.[5] இதன் புகழ் காரணமாக, காஷ்யப் நாடகத்தின் இரண்டாம் பாகத்தையும் லோஹா சிங்: முராப்பே அவுர் அன்யா கார்டுடென் என்ற பெயரில் எழுதினார்.[6]
பெருமை
தொகு- 1966-ல், இந்த நாடகம் திரைப்படமாக்கப்பட்டு போச்புரி திரைப்படமான லோகா சிங் என வெளியிடப்பட்டது. [7]
- லாலு பிரசாத் லோகா சிங்கின் பாணியைப் பின்பற்றி மக்கள் செல்வாக்கினைப் பெற முயன்ற போது இந்த நாடகம் இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகித்தது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gajrani, S. History, Religion and Culture of India, Volume 4. p. 69.
- ↑ Ghosh, Avijit (2010). CINEMA BHOJPURI. Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8184752563.
- ↑ Sahay, Navneet (2016). Patna: A Paradise Lost!: Saga of a 2500 Year Old City from Ajatshatru to Present Day Patna. Notion Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1946204544.
- ↑ Hussain, Taiyab (2004). Bhojpuri Sahitya ke sankshipt ruprekha. Shabd Sansar.
- ↑ Ghosh, Avijit (2008). Bandicoots in the Moonlight. Penguin Books India.
- ↑ Upadhyay, Krishnadev (1972). Bhojpuri Sahitya ka Itihas. Bharatiya lok Sanskriti Shodh Sansthan.
- ↑ Ghosh, Avijit. Cinema Bhojpuri.
- ↑ Kumar, Pradeep. "लालू के बिना बिहार में लालू यादव का कितना असर?: लोकसभा चुनाव 2019".