லோகோபகாரி

லோகோபகாரி தமிழில் முன்பு வெளிவந்த தேசபக்தப் பத்திரிக்கை. 1895 ஆம் ஆண்டு லோகோபகாரி துவங்கப் பெற்றது.[1]இப்பத்திரிக்கையை சென்னையிலிருந்து கோ.வடிவேலு செட்டியார் வெளியிட்டார்.

இதன் ஆசிரியராகச் செயல்பட்டவர் வி.நடராஜ ஐயர்.[2][3]இவ்விதழின் துணையாசிரியராக 1913–15 ஆம் ஆண்டுகளிலும் 1917-18ஆம் ஆண்டுகளிலும் பரலி சு. நெல்லையப்பர் செயல்பட்டார்.பின்னர் இவரே 1922ஆம் ஆண்டில் லோகோபகாரி இதழை விலைக்கு வாங்கி 1941ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1943 ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரையும் அதன் ஆசிரியராகவும் இருந்தார். 1941–1943 ஆண்டு காலகட்டத்தில் மதுரையைச் சேர்ந்த ஐ. மாயாண்டி பாரதி இவ்விதழில் துணையாசிரியராக இருந்தார்.

மேலும் பார்க்கதொகு

பரலி சு. நெல்லையப்பர்

மேற்கோள்கள்தொகு

  1. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; ஆகஸ்டு 2007; தமிழில் ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த இலக்கியங்கள்; பெ.சு.மணி
  2. http://vivekanandam150.com/?tag=லோகோபகாரி
  3. http://books.google.co.in/books/aboutலோகோபகாரி_பத்த.html?id=xb8VSQAACAAJ&redir_esc=y
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகோபகாரி&oldid=1714951" இருந்து மீள்விக்கப்பட்டது