லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி (இந்தியா)
லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி (Loktantrik Samajwadi Party-India) என்பது இந்தியாவில் உள்ள ஒரு சிறிய அரசியல் கட்சியாகும். இது 9 சனவரி,1994 அன்று பட்னாவில் ஜனதா தளம் கட்சி சேர்ந்த மூன்று மூத்த இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்களால் நிறுவப்பட்டது. இதனை நிறுவியவர்கள் ராம் சுந்தர் தாசு, ரசீத் மசூத் மற்றும் உபேந்திர நாத் வர்மா ஆவர்.[1]
லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி Loktantrik Samajwadi Party | |
---|---|
சுருக்கக்குறி | LSWP |
தலைமையகம் | 27-ஏ, டிடிஏ பிளாட்டு, சுந்தரி சாலை, தர்யா கஞ்ச், புது தில்லி– 110002 |
இந்தியா அரசியல் |
தேர்தல் செயல்பாடு
தொகு1998ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்தக் கட்சி 14 இடங்களில் போட்டியிட்டது. 1999, 2004, 2009 மற்றும் 2014 தேர்தல்களிலும் இக்கட்சிப் போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைந்தது. 2014ஆம் ஆண்டில் இக்கட்சி இரண்டு இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்ட ஒவ்வொரு தொகுதியிலும் இவர்கள் செலுத்து தொகையினை இழந்தனர்.[2]
2008ஆம் ஆண்டு இராசத்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஓர் இடத்தை இக்கட்சி வென்றது.[3][4] 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைத் தேர்தலில் குசராத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Vijaya R. Trivedi, A Chronicle of World Events: January–March 1994, p. 31, Gyan Publishing, 1994, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8121202132.
- ↑ "PC: Party performance over elections - Loktantrik Samajwadi Party", India Votes, retrieved 15 May 2021.
- ↑ Darpan, Pratiyogita (February 2009). "Pratiyogita Darpan".
- ↑ "AC: Party performance over elections - Loktantrik Samajwadi Party", India Votes, retrieved 15 May 2021.