லோபமுத்ரா ஆர்.

லோபமுத்ரா ஆர். (Lopamudra R.;பிறப்பு 26 ஏப்ரல் 1978) என்பவர் இந்தியக் கவிஞர் மற்றும் மலையாள மொழியில் லோபா என்ற புனைபெயருடன் எழுதும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவரது படைப்புகளில் பரஸ்பரம், வைக்கோல் பவ ஆகியவை இலக்கிய விருதுகளை வென்றுள்ளன. இவர் 15 வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். மேலும் 20 வயதில் இலக்கிய வட்டங்களில் நன்கு அறியப்பட்டார்.[1]

லோபமுத்ரா ஆர்.
Lopamudra R.
பிறப்பு(1978-04-26)26 ஏப்ரல் 1978
ஹரிப்பாடு, கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
கல்வி நிலையம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பரஸ்பரம், வைக்கோல் பவ
குறிப்பிடத்தக்க விருதுகள்மண்டல சாகித்திய அகாதமி இளைஞர் விருது, 2012
துணைவர்மனோஜ்
பிள்ளைகள்1

வாழ்க்கை தொகு

லோபமுத்ரா 1978ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி ஆலப்புழையின் ஹரிபாடில் உள்ள ஆயபரம்பு ஊராட்சியில் முரளிதரன் மற்றும் ரேணுகா தம்பதியரின் மகளாகப் பிறந்தார். ஹரிகதா கலைஞரும் ஆசிரியருமான தனது தாத்தா ஆர். கே. கொட்டாரத்திடமிருந்து இவர் இலக்கியத் தொடர்பைப் பெற்றார். லோபா தனது 3 வயதில் தந்தையை இழந்தார்.

ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் இளங்கலை கல்வியியல் படிப்பினை முடித்த பிறகு, லோபா தனது இலக்கியப் படைப்புகளில் அதிக கவனம் செலுத்தினார். இவர் மலையாளத்தில் பல கவிதைகளை எழுதியுள்ளார். பல கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து மலையாளத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். தற்போது திருச்சூரில் உள்ள அழகப்பா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றுகிறார்.[2]

கௌரவங்களும் விருதுகளும் தொகு

  • 2017 - ஓ. வெ. விஜயன் நினைவு விருது, வைக்கோல் பாவா (கவிதைத் தொகுப்பு) [3] [4]

குறிப்பிடத்தக்க படைப்புகள் தொகு

  • 2011 - பரஸ்பரம் - கவிதைத் தொகுப்பு [5]
  • 2015 - வைக்கோல் பாவ - கவிதைத் தொகுப்பு [5]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோபமுத்ரா_ஆர்.&oldid=3688043" இருந்து மீள்விக்கப்பட்டது