ஹரிப்பாடு
ஹரிப்பாடு (Haripad) என்பது ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஒனட்டுகரை பகுதியில் உள்ள ஒரு நகராட்சி ஆகும் ஹரிப்பாட்டின் கிழக்கே பள்ளிப்பாடு, வீயபுரம் மற்றும் கார்த்திகப்பள்ளி மேற்கிலும், தெற்கில் சேப்பாடு[1]ஆகியவை எல்லையாக உள்ளது. இது கலை, கலைஞர்கள், பாம்பு படகுகளின் பூமி, இசை, நடனம் மற்றும் நாடகத்தின் பூமி என்று அழைக்கப்படுகிறது. இது க்ஷேத்ரநகரி ( கோவில்களின் நகரம் ) என்றும் பிரபலமாக அறியப்படுகிறது. ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் இவற்றில் முதன்மையானது.
ஹரிப்பாடு நகரம்/நகராட்சி | |
---|---|
ஆலப்புழா | |
அடைபெயர்(கள்): ஷேத்ரகரி (கோவில் நகரம்) | |
ஆள்கூறுகள்: 9°18′0″N 76°28′0″E / 9.30000°N 76.46667°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | ஆலப்புழா |
நிறுவப்பட்டது | 1921 |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ஹரிப்பாடு நகராட்சி |
• தலைவர் | கே. எம். ராஜு |
• சட்டமன்ற உறுப்பினர் | இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் ரமேஷ் சென்னிதலா |
பரப்பளவு | |
• மொத்தம் | 19.24 km2 (7.43 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 30,977 |
• அடர்த்தி | 1,600/km2 (4,200/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 690514 |
தொலைபேசி இணைப்பு எண் | 0479 |
வாகனப் பதிவு | கேஎல்-29 |
நருகிலுள்ள நகரம் | ஆலப்புழா |
மக்களவை (இந்தியா) மக்களவை]] | ஆலப்புழா |
இணையதளம் | https://haripadmunicipality.lsgkerala.gov.in/en/ |



வெளிநாட்டினரையும் கவரும் ஹரிப்பாட்டின் முக்கிய அம்சம் "பாய்ப்பாட் ஜலோத்சவம்". தற்போது வழிபடும் சுப்பிரமணியர் சிலை காந்தல்லூரில் இருந்து பாம்பு படகுகள் மற்றும் வல்ல சடையுடன் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.[2] ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையம் ( காயம்குளம், தேசிய அனல் மின் நிறுவனம்) ஹரிப்பாடு சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது.
ஹரிப்பாடு அதன் பெயரை அரிபாட் (அரி என்றால் அரிசி) அல்லது "ஹரிகீதபுரம்" என்பதிலிருந்து பெறப்பட்டது.[3] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஊரின் மக்கள் தொகை 16,445 ஆகும்.[4]
குறிப்பிடத்தக்கவர்கள் தொகு
- சுவாமி நிர்மலானந்தா (1863–1938), இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (1836–1886)[5]
- கேரள வர்மா வல்லிய கோயி தம்புரான் (1845–1914) மயூரசந்தேசம் எனும் நூலின் ஆசிரியர். தனது அன்பு மனைவிக்கு மயில்கள் மூலம் அனுப்பும் காதல் கடிதங்கள் அடங்கிய சந்தேஷ் காவியத்தை எழுதும் போது ஹரிப்பாடில் தங்கியிருந்தார்.[6]
- டி. கே. மாதவன் (1885–1930), சமூக சீர்திருத்தவாதி
- வெ. தட்சிணாமூர்த்தி (1919–2013), கருநாடக இசைக் கலைஞர்
- பத்மராஜன் (1945–1991), மலையாள திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர்
- ரமேஷ் சென்னிதலா, இந்திய தேசிய காங்கிரசுவைச் சேர்ந்த கேரள அரசியல்வாதி
- ம. கோ. இராதாகிருட்டிணன் (1940–2010), கருநாடக இசைக் கலைஞர்
- கே . ஓமனக்குட்டி அம்மா (1943–), இசைக் கலைஞர்
- எம். ஜி. ஸ்ரீகுமார் (1957–), இசையமைப்பாளர், பாடகர், இசை இயக்குநர்
- ராஜேஸ் பிள்ளை (1974–2016), திரைப்பட இயக்குநர்
- ஏ. பி. உதயபானு (1915–1999), காங்கிரசு தலைவர், எழுத்தாளர்
- சிறீகுமாரன் தம்பி (1940–), எழுத்தாளர், பாடலாசிரியர்
- கே. மது (1953–), இயக்குநர்
- எரிக்காவு என். சுனில் (1977-), தேசிய விருது பெற்ற க் கலைஞர் எழுத்தாளர்
- மல்லிகா சுகுமாரன் (1954–), நடிகை
- மது முட்டம் (1951–), திரைக்கதை எழுத்தாளர்
- அசோகன் (1960–), நடிகர்
- நவ்யா நாயர் (1985-) திரை நடிகை
- சிபிசி வாரியர் (1932–2013), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இந்தியப் பொதுவுடமைக் கட்சி
- சந்தோஷ் சிவன் (1964–), ஒளிப்பதிவாளர்
- லோபமுத்ரா ஆர்., Pகவிஞர், மொழிபெயர்ப்பாளர், கேந்திர சாகித்ய அகாதமி யுவ புரஸ்கார் மற்றும் ஓ.வி.விஜயன் சாகித்ய விருது, துஞ்சன் சமாரக விருது வென்றவர்
- விஷ்ணு எச். வாரியர் (1987-), எழுத்தாளர்[7] and FIDE rated Chess Player,
- முனைவர் அருண் குமார் எஸ், கவிஞர்
சான்றுகள் தொகு
- ↑ "Location Map of Haripad". Haripad.in. http://www.haripad.in/wp-content/uploads/2017/08/Haripad-constituency-map12.jpg.
- ↑ "Haripad Overview". Blessings on the Net. http://blessingsonthenet.com/travel-india/destination/id/619/haripad.
- ↑ "About Haripad". Haripad.in. http://www.haripad.in/about-haripad/.
- ↑ "Veethi". http://www.veethi.com/haripad/PL4478.
- ↑ "Swami Nirmalananda: His life and teachings". vivekananda.net. http://www.vivekananda.net/PDFBooks/Nirmalananda.pdf.
- ↑ "History of Haripad". Haripad.in. http://www.haripad.in/about-haripad/haripad-sociocultural-history/.
- ↑ LexisNexis
வெளிஇணைப்புகள் தொகு
- About Karichalchundan
- snakeboat races – Snake boat races in Haripad
- Sociocultural History – History of Haripad
- Haripad – Haripad