கார்த்திகப்பள்ளி

கார்த்திகப்பள்ளி (Karthikappally) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். [1]

கார்த்திகப்பள்ளி
கிராமம்
ஆள்கூறுகள்: 9°15′0″N 76°26′0″E / 9.25000°N 76.43333°E / 9.25000; 76.43333
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழா
பரப்பளவு
 • மொத்தம்20,287 km2 (7,833 sq mi)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்19,064
 • அடர்த்தி0.94/km2 (2.4/sq mi)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்690516
தொலைபேசி இணைப்பு எண்0479
அருகிலுள்ள நகரம்ஆலப்புழா
கல்வியறிவு83%%
காலநிலைவெப்பமண்டல பருவமழை (கோப்பென்)
சராசரி கோடை வெப்பநிலை35 °C (95 °F)
சராசரி குளிர்கால வெப்பநிலை20 °C (68 °F)
இணையதளம்www.karthikappally.blogspot.com

வரலாறு தொகு

கார்த்திகப்பள்ளி ஒரு காலத்தில் பௌத்த மையமாக இருந்தது. 904-933 ஆம் ஆண்டில் திருவிதாங்கூரின் ஆட்சியாளரான மார்த்தாண்ட வர்மர், இந்த ஊரை திருவிதாங்கூருடன் சேர்த்தார். 1742 மற்றும் 1753 ஆம் ஆண்டுகளில் அருகிலுள்ள இடங்களான காயம்குளம், அம்பலப்புழா ஆகியவை கார்த்திகப்பள்ளியுடன் சேர்க்கப்பட்டன. அதன் பின்னர் இது ஒரு முக்கிய பிராந்தியமாக மாறியது. இப்போது இருக்கும் புரக்காடும் காயம்குளம் இடையேயான பகுதி ஒரு காலத்தில் இதனுடன் இருந்தது. [2]

ஹரிப்பாடு கார்த்திகப்பள்ளி வட்டத்தின் தலைமையகமாக உள்ளது. மன்னார்சாலை கோயில் கிராமத்திற்கு அருகிலுள்ள புகழ்பெற்ற ஆலயமாகும். பாண்டி என்ற ஒரு தீவும் இங்கு அமைந்துள்ளது.

புள்ளிவிவரங்கள் தொகு

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கார்த்திகப்பள்ளியில் 19064 என்ற அளவில் மக்கள் இருக்கின்றர். இதில் 9107 ஆண்களும் 9957 பெண்களும் உள்ளனர் .[3]

குறிப்புகள் தொகு

  1. "Census of India:Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  2. Karthikappally. Karthikappally.blogspot.com. Retrieved on 2013-01-25.
  3. "Census of India:Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10."Census of India:Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. Retrieved 10 December 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்திகப்பள்ளி&oldid=3708779" இலிருந்து மீள்விக்கப்பட்டது