அசோகன் (நடிகர்)

இந்திய நடிகர்

அசோகன் (Ashokan) மலையாளத் திரைப்படங்களில் நடித்துவரும் ஒரு இந்திய நடிகராவார். 1979 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்ற பெருவாழியம்பலம் மூலம் இவர் அறிமுகமானார். யவனிகா (1982), யுவஜனோத்ஸவம் (1986), தூவானத்தும்பிகள் (1987), மூனாம் பக்கம் (1988), ஹரிஹர் நகர் (1990), அமரம் (1990), மற்றும் 2 ஹரிஹர் நகர் (2009) ஆகிய படங்களில் இவர் மிகவும் பிரபலமானார்.[1]

அசோகன்
பிறப்புஅசோகன்
23 மே 1961 (1961-05-23) (அகவை 62)
செப்பாடு, ஹரிப்பாடு, கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1978– தற்போது வரை
பெற்றோர்சமுதாயத்தில் என். பி. உன்னிதன்
அழகத்து சாவித்ரி
வாழ்க்கைத்
துணை
சிரீஜா
பிள்ளைகள்கார்த்தியாயினி

தொழில் தொகு

1979ஆம் ஆண்டில் பத்மராஜன் இயக்கிய பெருவாழியம்பலம் என்ற படத்தில் அறிமுகமானார். இதில் இவர் 15 வயது சிறுவனாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து பத்மராஜனின் படங்களான அரப்பட்டா கேட்டியா கிராமத்தில் (1986), தூவானத்தும்பிகள் (1987) மூனாம் பக்கம் (1988) ஆகிய படங்கள் இவருக்கு திருப்பத்தை ஏற்படுத்தியது. அடூர் கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் அனந்தரம் என்ற படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்தார்.[2] பி.வேணு இயக்கிய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத் திரைப்படமான பரிணாமம் (2003) என்ற திரைப்படத்தில் இவர் நடித்தார். இது இசுரேலில் நடைபெற்ற அஷ்டோத் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதை விருதை வென்றது. இவரது ஆரம்ப வாழ்க்கையில்,தான் ஒரு பின்னணி பாடகராக ஆசைப்பட்டார்.[3] பாடுவதில் தெளிவான திறமையுடன், தொலைக்காட்சியில் பல்வேறு திரைப்பட-பாடல் சார்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

சொந்த வாழ்க்கை தொகு

இவர், சாமுதாயத்தில் என். பி. உன்னிதன், அழகத் சாவித்ரி ஆகியோரின் நான்கு குழந்தைகளில் ஒருவராக 23 மே 1961 அன்று ஆலப்புழா மாவட்டத்தின் செப்பாட்டில் பிறந்தார்.[4] இவரது தந்தை நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் அரசு வழக்குறைஞராக இருந்தார். இவரது தாய் இல்லத்தரசியாவார். இவருக்கு இராதாகிருட்டிணன் உன்னிதன், பிரசன்னா குமார், ஹரிகுமார் என்ற மூன்று சகோதரர்கள் உள்ளனர்.[5] இவர் இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். தனது தாயால் வளர்க்கப்பட்டார். அசோகன் தனது அடிப்படைக் கல்வியை சிங்கோலி, கார்த்திகப்பள்ளி பள்ளிகளில் தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர், ஹரிபாடின் நங்கியர்குளங்கரை, டி.கே மாதவ நினைவுக் கல்லூரியில் கலைப் பட்டம் பெற்றார். பெருவாழியம்பலம் என்ற படத்தில் ஒரு பாத்திரம் வழங்கப்பட்டபோது இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.[6]

சிறீஜா என்பவரை மணந்த இவருக்கு கார்த்தியாயினி என்ற மகள் உள்ளார்.[7] இவர்கள் தற்போது சென்னையில் வசிக்கின்றனர்.

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோகன்_(நடிகர்)&oldid=3540646" இருந்து மீள்விக்கப்பட்டது